ரஞ்சித் மத்தும பண்டார

நீரில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அமைச்சர் பண்டார சரியாக குறிப்பிடுகின்றார்

"

நீரில் மூழ்குவதால் வருடாந்தம் சுமார் 800 மரணங்கள் சம்பவிக்கின்றன.

தினமின | மே 15, 2020

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்த மேலுள்ள கூற்றினை, தினமின 2019 மே 15 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.

2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தற்செயலாக நீரில் மூழ்குவதால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் உண்மையான எண்ணிக்கையை அட்டவணை 1 காட்டுகின்றது. தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தில் இருந்து பெறப்பட்ட இந்த தரவுகளே FactCheck இனால் பெற்றுக்கொள்ள முடிந்த சமீபத்திய தரவுகளாக காணப்படுகின்றன. தலைமை பதிவாளர் திணைக்களம், உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை தேசிய உயிர் காக்கும் சங்கத்தில் இருந்து FactCheck இனால் அண்மைய தரவுகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

தரவுகளின் பிரகாரம், 2010 – 2014 காலப்பகுதியில் தற்செயலாக நீரில் மூழ்கி ஏற்பட்ட மரணங்களின் ஐந்தாண்டு சராசரி 813 ஆகும். மூன்றாண்டுகளின் சராசரி, அதாவது 2012 – 2014 காலப்பகுதியில், 786 ஆகும். அமைச்சர் எண்ணிக்கையைக் குறிப்பிடும் போது குறிப்பாக எந்த ஆண்டு எனக் குறிப்பிடவில்லை, ஆனால் வருடாந்த வீதத்தையே குறிப்பிட்டிருந்தார். 2015 ஆம் ஆண்டிலிருந்து தரவுகள் காணப்படாத நிலையில், 2010 – 2014 ஆம் ஆண்டுக்கான தரவுகள் அமைச்சரின் கூற்றுடன் பொருந்திப் போகின்றன.

எனவே நாங்கள் அமைச்சரின் கூற்றினை ‘சரியானது’ என வகைப்படுத்துகின்றோம்.

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: நீரில் மூழ்குவதால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை

மேலதிக ஆதாரங்கள்:

தலைமை பதிவாளர் திணைக்களத்தின் 2008 – 2017 ஆம் ஆண்டுக்கான முக்கிய புள்ளிவிபர அறிக்கைகளில் உள்ள எண்ணிக்கையும், தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2010 மற்றும் 2013 ஆம் ஆண்டுக்கான தரவுகளும் ஒத்துப்போகின்றன. ஆனால் அதற்கு பின்னரான ஆண்டுகள் தொடர்பில் விபரங்கள் இல்லை.

2014 ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ‘நீரில் மூழ்குதல் தொடர்பான உலகளாவிய அறிக்கை: முன்னணி கொலையாளியைத் தடுத்தல்’ என்ற அறிக்கையின் பிரகாரம், நீரில் மூழ்குவதால் ஏற்படும் உயிரிழப்பு வீதத்தில் அதி உயர்ந்த 61 நாடுகளின் பட்டியலில் இலங்கை 12 ஆவது இடத்தில் உள்ளது.  மற்றும் மத்தியதர வருமானத்தைக் கொண்ட 35 நாடுகளின் பட்டியலில் இலங்கை 10 ஆவது இடத்தில் உள்ளது. எனினும், இந்த அறிக்கையில் 2006 ஆம் ஆண்டு முதலே தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஆண்டில் நீரில் மூழ்குவதால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 932 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர் காக்கும் விக்டோரியா அமைப்பின் (Life Saving Victoria) பங்களிப்புடன், உலக சுகாதார நிறுவனத்தின் உதவியுடன் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை தேசிய உயிர் காக்கும் சங்கம் நீரில் மூழ்குவதால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பில் மற்றொரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில், 2001 முதல் 2006 மற்றும் 2009 காலப்பகுதியில் நீரில் மூழ்குவதால் ஏற்பட்ட மரணங்களின் சராசரி எண்ணிக்கை 855 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு பின்னரான ஆண்டுகள் தொடர்பில் எந்த புள்ளிவிபரங்களும் அந்த அறிக்கையில் இல்லை.



மூலம்

Sources

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம், குடித்தொகை மற்றும் வீடமைப்பு, முக்கிய புள்ளிவிபரங்கள், திருமணங்கள், பிறப்புக்கள், குழந்தை இறப்புக்கள், இறப்புக்கள், மரணத்திற்கான காரணம், வயது மற்றும் பாலினத்தின் அடிப்படிடையில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை, 2010 -2014, பார்வையிட:  http://www.statistics.gov.lk/page.asp?page=Population%20and%20Housing

உலக சுகாதார நிறுவனம், நீரில் மூழ்குதல் தொடர்பான உலகளாவிய அறிக்கை: முன்னணி கொலையாளியைத் தடுத்தல், பக்கம் 58,  பார்வையிட: https://apps.who.int/iris/bitstream/handle/10665/143893/9789241564786_eng.pdf?sequence=1

தலைமை பதிவாளர் திணைக்களம், இலங்கை, முக்கிய புள்ளிவிபர அறிக்கை 2008 – 2017, பக்கம் 124, பார்வையிட: http://www.rgd.gov.lk/web/images/pdf/VITAL-STATISTICS-REPORT-2008-2017.pdf

இலங்கை தேசிய உயிர்காக்கும் சங்கம், நீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்கும் அறிக்கை, பக்கம் 7, பார்வையிட: https://www.scribd.com/document/251418871/Drowning-Prevention-Report-Sri-Lanka-2014