செஹான் சேமசிங்க

செஹான் சேமசிங்க வருமானம் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகின்றார்

"

(புதிய NPP அரசாங்கத்திற்கு) அரச வருமானத்தை (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) 13.1 சதவீதமாக அதிகரிப்பது சவாலாக இருக்கவில்லை.

Iroma TV | அக்டோபர் 21, 2024

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

மேற்குறிப்பிட்ட கூற்றைச் சரிபார்ப்பதற்கு, இலங்கை மத்திய வங்கியின் வாராந்தக் குறிகாட்டிகள் மற்றும் ஆண்டறிக்கை 2023 ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் வரவு செலவுத்திட்டத்தின் 13.1% இலக்கு மானியங்களையும் உள்ளடக்கியது. எனவே FactCheck.lk வருமானம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது மானியங்கள் உள்ளடக்கப்பட்டதையே குறிப்பிடுகின்றது.

 

வருமானம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான தரவுகள் முழு ஆண்டிற்கும் இல்லாமல் முதல் ஒன்பது மாதங்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், முதல் ஒன்பது மாதங்களுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருமானத்தின் சதவீதம் முழு ஆண்டிற்குமான சதவீதத்தை விட சற்றுக் குறைவாகவே காணப்படுகின்றது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்).

 

எனவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை மதிப்பிடுவதற்கு FactCheck.lk பின்வரும் அளவுகோல்களை உருவாக்கியது: 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருமானத்தின் சதவீதம் அதன் ஆண்டு இலக்கை எட்டியுள்ளதா அல்லது அதை விட அதிகமாக உள்ளதா? அவ்வாறு எனில் மேலே குறிப்பிடப்பட்ட கடந்தகாலப் போக்குகளின் அடிப்படையில் வருடாந்த இலக்கை எட்டுவது “(குறிப்பிடத்தக்க) சவாலாக இல்லை” என்ற நியாயமான முடிவுக்கு வரலாம்.

 

2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கை ரூ.22,176 பில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ.2,928 பில்லியனை வருமானமாக ஈட்டியிருந்தது. எனவே முதல் ஒன்பது மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருமானத்தின் சதவீதம் 13.2 சதவீதமாக இருந்தது. ஆண்டு இலக்கு 13.1% ஆகும். முதல் ஒன்பது மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருமானத்தின் சதவீதம் மேலே விளக்கப்பட்ட அளவுகோல்களை விட அதிகமாக உள்ளது என்பதை இது காட்டுகின்றது. அதாவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருமானத்தின் ஆண்டிறுதி சதவீதமானது 13.1% என்னும் இலக்கை எட்டும் அல்லது அதை விட அதிகமாக இருக்கும் என்பதை எதிர்பார்க்கலாம் என்பதைக் காட்டுகின்றது.

 

எனவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை FactCheck.lk சரியானது என வகைப்படுத்துகின்றது.

 

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும். 

அட்டவணை 1: முதல் ஒன்பது மாதங்களில் சேகரிக்கப்பட்ட மொத்த வருமானம் மற்றும் மானியங்கள் எதிர் (Vs.) முழு ஆண்டு (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக)



மூலம்

வாராந்தக் குறிகாட்டிகள், இலங்கை மத்திய வங்கி

ஆண்டறிக்கை 2023, இலங்கை மத்திய வங்கி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன