உண்மைச் சரிபார்ப்புகளும்
மேலேயுள்ள கூற்றில், இலவச சுகாதாரத்துறைப் பணிகளுக்கு தற்போதைய அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாகவும், இது அரச வருமானத்தில் குறிப்பிடத்தக்க விகிதமாக உள்ளதாகவும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் தெரிவிக்கின்றார்.
அமைச்சர் குறிப்பிடும் ஆண்டுகளில் சுகாதார அமைச்சின் வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை தொடர்பில் அவர் சரியாகவே தெரிவித்துள்ளார் (அட்டவணை ஒன்றைப் பார்க்கவும்). ‘சுகாதாரத்துறைச் செலவினம்” என அமைச்சர் குறிப்பிடும் அரச வருமானத்தின் 10 சதவீதமானது, சுகாதார அமைச்சினால் மாத்திரம் செலவிடப்படும் தொகையை விட அதிகமாகும் (2018 ஆம் ஆண்டில் 8.6 சதவீதம்) ஆனால் மத்திய வங்கியினால் கணக்கிடப்படும் மொத்த தேசிய சுகாதாரத்துறைச் செலவினத்தை விடவும் குறைவானது (மாகாண சபைகளையும் உள்ளடக்கியது). 2018 ஆம் ஆண்டில் வருமானத்தின் 11.3 வீதமாக இது காணப்பட்டது.
மேலதிகமாக, மூன்று விடயங்களில் இந்தக் கூற்றினை FactCheck கடுமையான மதிப்பீட்டிற்கு உட்படுத்தியது. (அ) அமைச்சர் மேற்கோள் காட்டும் வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டிற்கு பதிலாக உண்மையான செலவினம் (ஆ) தேசிய சுகாதாரத்துறைச் செலவினங்களுக்குப் பதிலாக சுகாதார அமைச்சின் செலவினம் மாத்திரம் (இ) அமைச்சர் குறிப்பிடும் பெயரளவிலான அதிகரிப்புக்கு பதிலாக உண்மையான (பணவீக்கம் சரிசெய்யப்பட்ட) அதிகரிப்பு
(அ) ஒதுக்கப்பட்ட செலவினம் மற்றும் உண்மையான செலவினம்: 2015, 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் உண்மையான செலவினம் அமைச்சர் குறிப்பிட்ட சுகாதார அமைச்சின் வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளை விட 7.4, 21.5 மற்றும் 6.4 வீதங்களினால் குறைவாகும். ஆனால் 2010 ஆம் ஆண்டில் உண்மையான செலவினம் ஓரளவு அதிகமாக இருந்தது.
(ஆ) சுகாதார அமைச்சின் செலவினம் மற்றும் தேசிய சுகாதாரத்துறைச் செலவினம்: அமைச்சர் மேற்கோள் காட்டிய தொகையானது சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட/செலவிடப்பட்ட செலவினங்களை மாத்திரமே உள்ளடக்கியது. எனினும், சுகாதாரத்துறைப் பணிகளை வழங்கும் ஒரேயொரு அரச அமைப்பு சுகாதார அமைச்சு மாத்திரம் இல்லை. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட, செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு சுகாதாரத்துறைச் செலவினங்களை வகைப்படுத்திய புள்ளிவிபரமே பொருத்தமானது ஆகும். இந்த புள்ளிவிபரம் அனைத்து அரச அமைப்புக்களினாலும் வழங்கப்படும் சுகாதாரத்துறைப் பணிகளின் செலவினங்களை உள்ளடக்கியது. அத்துடன் மாகாண வரவுசெலவுத் திட்டத்தினையும் உள்ளடக்கியது. இது சுகாதார அமைச்சின் வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் வராது. அமைச்சர் குறிப்பிடும் ஆண்டுகளில் (தரவு கிடைக்காத 2019 ஆம் ஆண்டு உள்ளடக்கப்படவில்லை) தேசிய சுகாதாரத்துறைச் செலவினமானது சுகாதார அமைச்சின் செலவினத்தை விட 30 – 36 சதவீதம் அதிகமாகும்.
(இ) பெயரளவு அதிகரிப்பு மற்றும் உண்மையான அதிகரிப்பு: 2018 ஆம் ஆண்டு செலவினத்தின் உண்மையான (பணவீக்கம் சரிசெய்யப்பட்ட) அதிகரிப்பானது 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்காகும்.
அமைச்சரின் கூற்று இவ்வாறான மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்ட பின்னரும், சுகாதார அமைச்சு மாத்திரமன்றி அனைத்து அரச அமைப்புக்களையும் உள்ளடக்கிய சுகாதாரத்துறைப் பணிகளுக்கான உண்மையான செலவினம் (அதாவது ஒதுக்கீடு அல்ல) 2010 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது அமைச்சரின் கூற்று சரியானது என்பதை சுட்டிக்காட்டுகின்றது.
எனவே நாங்கள் அமைச்சரின் கூற்றினை ‘சரியானது’ என வகைப்படுத்துகின்றோம்.
*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: அரசாங்கத்தின் சுகாதாரத்துறை தொடர்பான செலவினங்கள் (2010, 2015-2019)
மூலம்
- நிதி அமைச்சு, வரவுசெலவுத் திட்ட மதிப்பீடு (2010), தொகுதி II, ப. xxxii, 30.
- நிதி அமைச்சு, வரவுசெலவுத் திட்ட மதிப்பீடு (2015), அமைச்சு/நிறுவனங்களின் அரச செலவின அட்டவணை, பார்வையிட: http://www.treasury.gov.lk/documents/10181/179154/Expenditure.pdf/16db8a1b-5967-477a-9919-882d306e378f [last accessed: 22 October 2019];
- http://www.treasury.gov.lk/documents/10181/179154/Revenue.pdf/1b132c27-7949-4a19-995f-9a563bc0d3e2[last accessed: 22 October 2019]
- நிதி அமைச்சு, வரவுசெலவுத் திட்ட மதிப்பீடு (2016), ப. xxxiii, xxxv, பார்வையிட: http://www.treasury.gov.lk/documents/10181/219870/NBD+-+Budget+Estimate+2016+-+Eng.pdf/a1c65fd1-62a9-4aec-9b85-be4abcb01214 [last accessed: 22 October 2019]
- நிதி அமைச்சு, வரவுசெலவுத் திட்ட மதிப்பீடு (2019), ப. xxxvi, xxxvii, பார்வையிட:
- http://www.treasury.gov.lk/documents/10181/693643/Approved+Vol+1+English+Web+May.pdf/5882f82a-b0ae-46a2-aa66-f28997b2e713 [last accessed: 22 October 2019]
- இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கை (2018), சிறப்பு புள்ளிவிபரப் பின்னிணைப்பு, அட்டவணை 6, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2018/ta/15_S_Appendix.pdf[last accessed: 22 October 2019]
- இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கை (2018), புள்ளிவிபரப் பின்னிணைப்பு, அட்டவணை 36, பார்வையிட:
- https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2018/ta/14_Appendix.pdf[last accessed: 22 October 2019]
- செய்திப் பிரசுரத்தைப் பார்வையிட: http://www.dinamina.lk/2019/08/22/පුවත්/79194/ගුණාත්මක-ඖෂධ-අඩු-මිලට-දෙන්න-ඖෂධ-නියාමනයක්-කළේ-වත්මන්-ආණ්ඩුවයි [last accessed: 22 October 2019]