டி.வீ.சானக

சிவப்பு பச்சை அரிசியின் விலைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சானக கருத்து தெரிவித்துள்ளார்

"

அநுர குமார திசாநாயக்க தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, புறக்கோட்டை மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய இரண்டு சந்தைகளிலும் சிவப்பு பச்சை அரிசியின் விலை ரூ.210 ஆகக் காணப்பட்டது. [...][...] தற்போது உங்கள் மறுமலர்ச்சி அரசாங்கமே ஆட்சியில் உள்ளது. டிசம்பர் மாதத்தில் புறக்கோட்டை மற்றும் நாரஹேன்ப

நியூஸ் ஃபெர்ஸ்ட் | ஜனவரி 7, 2025

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

ஜனாதிபதி திசாநாயக்க 2024 செப்டெம்பர் 22 ஆம் திகதி பதவியேற்ற பிறகு புறக்கோட்டை மற்றும் நாரஹேன்பிட்டி சந்தைகளில் சிவப்பு பச்சை அரிசியின் விலை கிலோகிராமிற்கு ரூ.250 ஆக அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டி.வீ.சானக தெரிவித்துள்ளார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கியின் நாளாந்த விலைகள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் பொருளாதாரத் தரவு நூலகத்தை FactCheck.lk   ஆராய்ந்தது.

செப்டெம்பர் மற்றும் அக்டோபர் 2024 இல் விலையின் போக்குகள்: செப்டெம்பர் 19 ஆம் திகதி புறக்கோட்டை மற்றும் நாரஹேன்பிட்டி சந்தைகளில் சிவப்பு பச்சை அரிசியின் விலை ரூ.210 என்பதைப் பாராளுமன்ற உறுப்பினர் சரியாகத் தெரிவித்துள்ளார். இந்த விலை அதற்கு முந்தைய வாரங்களில் மாற்றமின்றி இருந்ததுடன் செப்டெம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் முழுவதும் மாற்றமின்றித் தொடர்ந்துள்ளன.

நவம்பர் மற்றும் டிசம்பர் 2024 இல் விலையின் போக்குகள்: புறக்கோட்டைச் சந்தையில் டிசம்பர் 5 ஆம் திகதி ரூ.210 இலிருந்து அதிகபட்சம் ரூ.255 ஆக அதிகரித்தது. அதன் பின்னர் டிசம்பர் 20 ஆம் திகதி வரை (டிசம்பர் மாதத்திற்குக் கிடைக்கும் சமீபத்திய தரவு) விலை குறைந்து ரூ.250 என்னும் ஸ்திர நிலையை அடைந்தது.

எனினும் நாரஹேன்பிட்டி சந்தையில் நவம்பர் மாதம் முழுவதும் விலை ரூ.210 ஆகக் காணப்பட்டது. டிசம்பர் 9 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகார சபை கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயித்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 12 ஆம் திகதி விலை ரூ.220 ஆக அதிகரித்தது. இந்த ரூ.220 என்னும் விலையே டிசம்பர் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தது.

சிவப்பு பச்சை அரிசியின் விலை புறக்கோட்டை சந்தையில் ரூ.250 ஆக அதிகரித்தது என்ற பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை மட்டுமே கிடைக்கும் தரவுகள் ஆதரிக்கின்றன. மாறாக நாரஹேன்பிட்டி சந்தையிலும் விலை அதிகரித்தது என்பதை ஆதரிக்கவில்லை.

ஆகவே பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை பகுதியளவு சரியானது என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.

அட்டவணை 1: டிசம்பர் மாதத்தில் சிவப்பு பச்சை அரிசியின் விலை (ரூ. / கிலோகிராம்)  

மூலம்: இலங்கை மத்திய வங்கி

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனதுமுடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

Daily Price Reports and Economic Data Library, Central Bank of Sri Lanka

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன