உண்மைச் சரிபார்ப்புகளும்
தொடர்ச்சி:
“… இந்த இடைவெளியானது வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து வந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களால் நிரப்பப்பட்டுள்ளது.”
பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றைச் சரிபார்க்க, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 1981 மற்றும் 2012 கணக்கெடுப்புகளை FactCheck.lk ஆராய்ந்தது. கணக்கெடுப்பில் “கொழும்பு நகரம்” என வரையறுக்கப்படவில்லை. 2012 கணக்கெடுப்பு மாவட்ட மட்டம் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு (DSD) மட்டத்தினாலான தரவை மட்டுமே வழங்குகிறது. 1981 கணக்கெடுப்பு மாவட்ட மட்டம் மற்றும் பிரதி அரசாங்க அதிபர் பிரிவு (AGA) மட்டத்தினாலான தரவை வழங்குகிறது. இது DSDகளுக்கு முன்னோடியாக இருந்தது. எனவே, பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள FactCheck.lk இரண்டு பகுதிகளை கவனத்தில் கொண்டது: (1) கொழும்பு மாவட்டம் மற்றும் (2) கொழும்பு மாநகர சபை பகுதிகளுடன் பொருந்தக்கூடிய AGA பிரிவு அல்லது DSDகள் – 1981 ஆம் ஆண்டில் கொழும்பு AGA மற்றும் 2012 ஆம் ஆண்டில் கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய DSDகள்.
தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவு 1981 முதல் 2012 காலப்பகுதியில் சிங்களவர்களின் சனத்தொகை கொழும்பு மாநகரசபை பகுதியில் குறைந்துள்ளதை அட்டவணை 1 சுட்டிக்காட்டுகிறது. இந்த வீழ்ச்சியானது 30 சதவீதத்திற்கும் (29.7%) குறைவானதாகும். பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது போன்று பாதியாக இல்லை. நகரத்திலுள்ள சிங்கள சனத்தொகை 2012 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவதைப் போன்று 28% அல்லாமல் 36.75 சதவீதமாக உள்ளது.
1981 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபை எனக் குறிப்பிடப்பட்ட பகுதி அதன் பின்னர் கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. இதன் காரணமாகவே பாராளுமன்ற உறுப்பினர் தவறாகக் குறிப்பிடுகிறார் எனக் கருதலாம். 1981 ஆம் ஆண்டில் மொத்தப் பகுதியின் சனத்தொகையை 2012 கணக்கெடுப்பில் ஒரு பகுதியுடன் அவர் (கொழும்பு DSDயுடன் மட்டும்) ஒப்பிடுகிறார் எனத் தெரிகிறது.
கொழும்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வருகையால் சிங்கள சனத்தொகை ஓரங்கட்டப்படுவது குறித்து இனரீதியிலான எச்சரிக்கை எழுப்பும் நோக்கத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கொழும்பு மாநகர சபையில் கவனம் செலுத்துவது பொருத்தமற்றது. நகரங்கள் அபிவிருத்தியடையும்போது தனிப் போக்குவரத்தைக் கொண்ட செல்வந்தர்கள் தங்கள் வீடுகளை புறநகர் பகுதிக்கு மாற்றிக்கொள்கின்றனர். இது பெருநகரத்தின் பகுதியாக மாறும். கொழும்பில் முன்னர் காணப்பட்ட மாநகர சபை எல்லைகள் மட்டுமன்றி தற்போது ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை (புதிய தலைநகரம்), தெகிவளை மற்றும் மவுண்ட் லவனியா என நகரம் விரிவடைந்துள்ளது.
1981 முதல் 2012 இடையிலான காலப்பகுதியில் கொழும்பு பெருநகரப் பகுதி உட்பட மாவட்ட மட்டத்தில், சிங்கள மக்களின் சனத்தொகை குறையவில்லை. மாறாக 450,000க்கும் மேலாக (34.5% அதிகரிப்பு) அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த சிங்கள சனத்தொகை குறைந்துள்ளது, ஆனால் அது மிகச்சிறிய சதவீதம் ஆகும். அதாவது 77.88 சதவீதத்திலிருந்து 76.54 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் இரண்டு தவறுகளைச் செய்கிறார்: (1) 1981 கொழும்பு மாநகர சபைப் பகுதியின் சிங்கள சனத்தொகையுடன் 2012 ஆம் ஆண்டின் மிகச் சிறிய கொழும்பு DSD பிரிவின் சனத்தொகையை அவர் தவறாக ஒப்பிடுகிறார். (2) பாரிய கொழும்பு பகுதி மற்றும் மாவட்டத்தில் (அவரது மதிப்பீட்டிற்கு இதுவே பொருத்தமானதாக இருக்கும்) சிங்கள சனத்தொகையில் அதிகரிப்பே (குறைவு இல்லை) காணப்படுகிறது, சனத்தொகையின் சதவீதத்தில் மட்டும் சிறிய அளவிலான வீழ்ச்சி காணப்படுகிறது.
ஆகவே அவரது அறிக்கையை நாங்கள் தவறானது என வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: கொழும்பில் சிங்கள சனத்தொகை
அட்டவணை 2: கொழும்பில் சிங்கள சனத்தொகை பிரதேச செயலாளர் பிரிவு 2012
அட்டவணை 3: கொழும்பில் சிங்கள சனத்தொகை 1981
மூலம்
மூலம்: தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் 2011: http://203.94.94.83:8041/index.php?fileName=Activities/TentativelistofPublications
தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்: http://www.statistics.gov.lk/Population/StaticalInformation/CPH2011