உண்மைச் சரிபார்ப்புகளும்
இந்தக் கூற்றின் உண்மைத்தன்மையை சரிபார்ப்பதற்கு நாங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) ரோம் பட்டயத்தையும் [EU1] ஆராய்ந்தோம்.
இந்த ஆதாரங்கள் பின்வருவனவற்றை சுட்டிக்காட்டுகின்றன.
(1) இலங்கையின் இணை அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் 30/1 இல், சர்வதேச நீதிமன்றம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை, மேலும் குறிப்பிட்ட நபர் ஒருவரை சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் எந்த அதிகாரத்தையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கவில்லை, எந்தவொரு விடயமாக இருந்தாலும் சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் பொதுவான அதிகாரம் மனித உரிமைகள் பேரவைக்கு கிடையாது.
(2) தனிநபர்கள் தொடர்பான குற்றவியல் பொறுப்புக்களை கையாள்வதற்கான அதிகாரத்தைக் கொண்ட ஒரேயொரு சர்வதேச நீதிமன்றம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகும். ஆனால் சர்வதேச நீதிமன்றத்தின் ரோமானிய சட்டத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை. கைச்சாத்திடாத நாடுகளில் உள்ள தனி நபர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுவரும் அதிகாரம் உள்ள ஒரே அமைப்பு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஆகும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இவ்வாறு செய்வதற்கான திறனை தீர்மானம் 30/1 பாதிக்காது.
இலங்கையர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு சர்வதேச நீதிமன்றத்திற்கோ பரிந்துரைப்பதற்கான நிலையை தீர்மானம் 30/1 இனால் மாற்ற முடியாது என்ற முடிவுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றின் மூலம் நாங்கள் வருகின்றோம்.
எனவே பாராளுமன்ற உறுப்பினர் கம்லத்தின் கூற்றினை ‘தவறானது’ என வகைப்படுத்துகின்றோம்.
*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.
கவனத்தில் கொள்ளவும்: மற்றொரு சர்வதேச நீதிமன்றமான அனைத்துலக நீதிமன்றம் (ICJ), தனது பட்டயத்தில் பங்காளர்களாக உள்ள அல்லது ஐ.நாவில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளை மாத்திரமே நீதிமன்றத்தின் முன் தோன்றுவதற்கு அனுமதிக்கின்றது. எனவே அனைத்துலக நீதிமன்றத்தில் நாடுகள் மாத்திரமே கொண்டுவரப்படலாம், தனிநபர்களை (இராணுவத்தினர் உட்பட) இந்த நீதிமன்றத்தின் முன் கொண்டு வர முடியாது.
மூலம்
- மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறுதல் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றை மேம்படுத்துதல், A/HRC/RES/30/1 (2015), பத்தி 6, பக்கம் 4, பார்வையிட: https://documents-dds-ny.un.org/doc/UNDOC/GEN/G15/236/38/PDF/G1523638.pdf?OpenElement [last accessed: 18 March 2020]
- சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் பட்டயம் (1998), சரத்து 13(b), பார்வையிட: https://www.icc-cpi.int/resource-library/documents/rs-eng.pdf [last accessed: 18 March 2020]
- ஐக்கிய நாடுகள், ஐக்கிய நாடுகளின் பட்டயம் (1945), சரத்து 93, பார்வையிட: https://www.un.org/en/sections/un-charter/chapter-xiv/index.html [last accessed: 18 March
- அனைத்துலக நீதிமன்றம், அனைத்துலக நீதிமன்றத்தின் பட்டயம் (1945), சரத்து 34(1), பார்வையிட: https://www.icj-cij.org/en/statute [last accessed: 18 March 2020]