உண்மைச் சரிபார்ப்புகளும்
அமெரிக்காவுடனான இலங்கையின் வர்த்தக உறவு தொடர்பில் கலாநிதி வசந்த பண்டார இரண்டு கூற்றுகளைமுன்வைக்கின்றார்: (1) இலங்கையின் 25% ஏற்றுமதி வருமானங்கள் அமெரிக்காவிடம் இருந்து கிடைக்கின்றன, (2) அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இலங்கைக்கு 88% வர்த்தக மிகை கிடைக்கின்றது.
இந்தக் கூற்றுகளைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுத் துறை புள்ளிவிபரங்கள், அமெரிக்க சர்வதேசவர்த்தக ஆணைக்குழுவின் (USITC) வர்த்தகத் தரவு மற்றும் ஏப்ரல் 2, 2025 திகதியிடப்பட்ட பரஸ்பர வரி விதிப்பு தொடர்பானவெள்ளை மாளிகையின் அறிக்கை ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.
கூற்று 1: ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு
கலாநிதி பண்டார தனது 25% பெறுமதிக்கான காலப்பகுதியைக் குறிப்பிடவில்லை. எனவே (i) மிகச் சமீபத்திய வருடாந்தத் தரவு(2024 இல் இலங்கையின் மொத்த பொருட்கள் ஏற்றுமதி), மற்றும் (ii) அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகளின் ஐந்தாண்டு சராசரிபங்கு (2020 – 2024) ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.
2024 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த பொருட்கள் ஏற்றுமதி $12.8 பில்லியன் என மத்திய வங்கியின் தரவு காட்டுகின்றது. இதில் $2.9 பில்லியன் அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகள் ஆகும். இது மொத்த ஏற்றுமதியில் 23% ஆகும். 2020 முதல் 2024 வரையான அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகளின் சராசரி பங்கு சுமார் 24% ஆகும்.
இரண்டு பெறுமதிகளும் கலாநிதி பண்டார குறிப்பிடும் 25% என்னும் கூற்றுடன் பொருந்துகின்றன.
கூற்று 2: வர்த்தக மிகை சதவீதம்
ஏப்ரல் 2, 2025 இல் டிரம்ப் நிர்வாகத்தால் பரஸ்பர வரி விதிப்பு கட்டணங்கள் அறிவிக்கப்பட்டபோது பிரபலமாக்கப்பட்ட கணக்கீட்டில் இருந்து கலாநிதி பண்டாரவின் கூற்று தோன்றியிருக்க வேண்டும். அமெரிக்க அதிகாரிகள் அறிக்கையிட்ட தரவைஅடிப்படையாகக் கொண்ட இந்த முறை, அமெரிக்காவின் நிலைப்பாட்டில் இருந்து இலங்கை உடனான வர்த்தகப் பற்றாக்குறையை விளக்குகின்றது.
அமெரிக்கா பதிவுசெய்த 2024 ஆம் ஆண்டுக்கான தரவை அடிப்படையாகக் கொண்டால், அமெரிக்கா இலங்கையுடன் 88% வர்த்தகப் பற்றாக்குறையைக் கொண்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்காவின் ஏற்றுமதியில் இருந்து இலங்கையிலிருந்துஅமெரிக்காவின் இறக்குமதியைக் கழிப்பதன் மூலம் இந்தப் பெறுமதி கணக்கிடப்படுகின்றது. இது இலங்கையிலிருந்து மொத்த அமெரிக்க இறக்குமதிகளின் சதவீதம் ஆகும். இந்தப் பெறுமதிதான் அமெரிக்காவுடனான இலங்கையின் வர்த்தக மிகையாகமாற்றாகக் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் புரிந்து கொள்ளப்பட்டவாறு, இலங்கை அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்ட தரவைப் பயன்படுத்தி இலங்கையின்வர்த்தக மிகை கணக்கிடப்படும். இது அமெரிக்க அதிகாரிகளால் பதிவு செய்யப்படும் தரவுகளுக்கு சமமானது அல்ல. இலங்கை தரவுகளின் பிரகாரம், 2024 இல் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி அமெரிக்காவிற்கான இறக்குமதியை விட $ 2.5 பில்லியன் அதிகம்ஆகும். அமெரிக்காவிற்கான மொத்த ஏற்றுமதி $2.9 பில்லியன். இது 85% வர்த்தக மிகையைத் தருகின்றது. இது இலங்கையின்கண்ணோட்டத்தில் மிகச் சரியான பெறுமதி ஆகும்.
இரண்டு கணக்கீடுகளும் நெருக்கமான பெறுமதிகளையே தருகின்றன. இரண்டு நாடுகளும் வர்த்தகத் தரவை எவ்வாறு பதிவுசெய்கின்றன என்பதில் உள்ள மாறுபாட்டால் இந்த வித்தியாசம் ஏற்படுகின்றது. கலாநிதி பண்டார இந்தக் கணக்கீடுகளில்ஒன்றைப் பயன்படுத்துகின்றார். இது உத்தியோகபூர்வ மறுப்பு இல்லாமல் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
எனவே நாங்கள் கலாநிதி பண்டாரவின் கூற்றை சரியானது என வகைப்படுத்துகின்றோம்.
மூலம்
இலங்கை மத்திய வங்கி, வெளிநாட்டுத் துறை புள்ளிவிபரங்கள் (2024). அமெரிக்க சர்வதேச வர்த்தக ஆணைக்குழுவின் (USITC) வர்த்தகத் தரவு.
ஏப்ரல் 2, 2025 வெளியான வரி விதிப்பு தொடர்பான வெள்ளை மாளிகை அறிக்கை.
மூலம்: ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு 2024 – புள்ளிவிபரப் பின்னிணைப்பு, இலங்கை மத்திய வங்கி.https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-economic-review/annual-economic-review-2024/statistical-appendix