றிஸாட் பதியுதீன்

அமைச்சர் றிஸாட் பதியுதீன்:  ஏற்றுமதி புள்ளிவிபரங்கள்  திருப்தியாக  உள்ளன.

"

தகவல், தொடர்பு மற்றும் தொழில்நுட்பம்/வர்த்தக செயலாக்க முகாமைத்துவம், மின்னணு, அச்சு மற்றும் பொதிசெய்யும் சேவைகள் மாத்திரம் ஒவ்வொரு ஆண்டும் ஏற்றுமதி வருமானத்தில் சுமார் 1.3 பில்லியன் டொலர்களை பங்களிப்புச் செய்கின்றன.

டெய்லி FT | ஆகஸ்ட் 28, 2019

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

மூன்று உபதுறைகளில் இருந்து ஏற்றுமதி வருமானம் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைப்பதாக நம்பகமான ஏற்றுமதி செயற்திறனை அமைச்சர் ரிஷhத் பதியுதீன் மேற்கோள்காட்டியுள்ளார். இந்தக் கூற்றின் உண்மைத்தன்மையை நாங்கள் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தரவுகளைப் பயன்படுத்தி ஆராய்ந்தோம். ஏற்றுமதி புள்ளிவிபரங்கள் 2018 ஆம் ஆண்டு வரை கிடைத்தாலும், அமைச்சர் குறிப்பிடும் மூன்று உபதுறைகளுக்குமான சமீபத்திய தகவல்கள் 2016 ஆம் ஆண்டு வரையே கிடைக்கின்றன – அதற்கு பின்னரான ஆண்டுகளுக்கான வருமான விபரங்கள் ‘அச்சு மற்றும் பொதியிடும்’ துறைக்கு காணப்படவில்லை.

இதற்கமைய, மூன்று உபதுறைகளுக்குமான தரவுகளை நாங்கள் 2016 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்களுடன் மதிப்பிட்டோம். தகவல், தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் (ICT) வர்த்தக செயலாக்க முகாமைத்துவ (BPM) உபதுறையின் மூலம் கிடைக்கப்பெற்ற ஏற்றுமதி வருமானம் 0.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (2018 ஆம் ஆண்டில் 1.035 பில்லியன் அமெரிக்க டொலர்கள்); மின் மற்றும் மின்னணு தயாரிப்பு உபதுறையின் மூலம் 0.302 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (2018 ஆம் ஆண்டில் 0.410 பில்லியன்); அச்சிடுதல், அச்சுக்கு முன்னரான சேவைகள் மற்றும் பொதியிடும் சேவைகளுக்கான உபதுறையின் மூலம் 0.122 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளன.

எனவே 2016 ஆம் ஆண்டில் இந்த மூன்று உபதுறைகள் மூலம் கிடைக்கப்பெற்ற ஏற்றுமதி வருமானம் 1.324 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். (2016 ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்ற மொத்த ஏற்றுமதி வருமானத்தில் இது 9.6 வீதம்)

எனவே நாங்கள் அமைச்சர் பதியுதீனின் கூற்றினை ‘சரியானது’ என வகைப்படுத்துகின்றோம்.

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.



மூலம்