உண்மைச் சரிபார்ப்புகளும்
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்த பின்வரும் கூற்றினை திவயின பத்திரிகை 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம 22 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.
“பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 71,172.56 ஏக்கர் காணிகளில் 63,257.48 ஏக்கர் 2009 ஆம் மே மாதத்திற்கும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் 88.87 வீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளன.”
இந்த கூற்றினை மதிப்பிடுவதற்கு, நாங்கள் நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான அலுவலகத்தினால் (SCRM) வெளியிடப்பட்ட தகவல்களை ஆராய்ந்தோம். அமைச்சர் கூறியவாறு, அரசாங்கம் கையகப்படுத்தியிருந்த 63,258 ஏக்கர் காணிகள் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதியன்று விடுவிக்கப்பட்டுள்ளதை அட்டவணை 1 காட்டுகின்றது.
அட்டவணை 1 2009 ஆம் ஆண்டு மே மாதம் இராணுவப்படையினரால்; கையகப்படுத்தப்பட்ட காணிகள் 88,722 ஏக்கர் என்பதனை சுட்டிக்காட்டுகின்றது. இது அமைச்சர் குறிப்பிட்ட 71,172.53 ஏக்கர் என்பதனை விட அதிகமானது;. எனவே, விடுவிக்கப்பட்ட அரச காணிகளின் சதவீதம் 71.29 ஆகும். அமைச்சர் குறிப்பிடும் 88.87 வீதத்துடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும்.
விடுவிக்கப்பட்ட காணிகளின் அளவினை அமைச்சர் சரியாகக் குறிப்பிட்டுள்ள போதும், அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் வீதத்தினை அவர் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே நாங்கள் அமைச்சரின் கூற்றினை “பகுதியளவில் உண்மை” என வகைப்படுத்துகின்றோம்.
*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: கையகப்படுத்தப்பட்ட காணிகள் மே 2009 – 12 மார்ச் 2019 காலப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டவை (ஏக்கர்)
மூலம்
- நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு, 2019 ஜனவரி 31 அன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றத்தின் முன்னேற்றம், click here to access the data.
- நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு, 2019 மார்ச் 31 அன்று மீள்குடியமர்த்தப்பட வேண்டிய குடும்பங்களின் விபரம், click here to access the data.