உண்மைச் சரிபார்ப்புகளும்
மேலேயுள்ள கூற்றில் செயற்திறனுடைய பொறுப்பு முகாமைத்துவ சட்டத்தை நிறைவேற்றியுள்ளதன் மூலம், அரசாங்கம் பின்வரும் விடயங்களை முன்னெடுக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.
- ஆண்டு வரம்பு இன்றி வெளிநாட்டுக் கடன்களை பெற்றுக்கொள்ள முடியும்.
- வரவு செலவுத்திட்டத்திற்கு (விதிகளுக்கு) அப்பாற்பட்டு எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம்.
செயற்திறனுடைய பொறுப்பு முகாமைத்துவ சட்டத்திற்கு அமைவாக, ஒதுக்கீட்டுச் சட்டத்தில் (வரவுசெலவுத்திட்டம்) வெளிப்படையாக குறிப்பிடப்பட்ட தொகையை விட கூடுதல் கடன்களை பெறுவதன் மூலம் பொதுப்படுகடன்களை அரசாங்கத்தினால் மறுநிதியளிப்பு அல்லது முன்கூட்டியே நிதியளிக்க முடியும். எனினும், முந்தைய நிதி ஆண்டின் இறுதியில் நிலுவையில் உள்ள மொத்த கடன்தொகையின் 10 வீதத்தை மாத்திரமே கடனாகப் பெற்றுக்கொள்ள முடியும் என ஆண்டு வரம்பினை இந்த சட்டம் நிர்ணயித்துள்ளது (பிரிவு 3). இந்த விதியின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து மேலதிக கடன்களும் வெளிநாட்டு கடன்களாக (வெளி மூலங்களில் இருந்து) இருந்தாலும் இந்த வரம்புக்கு உட்பட்டது என்பது இதன் அர்த்தமாகும். எனவே, பாராளுமன்ற உறுப்பினரின் இரண்டு கூற்றுக்களும் தவறாக உள்ளன.
நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை ‘தவறானது’ என வகைப்படுத்துகின்றோம்.
*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.