அனுர பிரியதர்சன யாப்பா

அனுர பிரியதர்ன யாப்பா: கையடக்கத் தொலைபேசி வரி தொடர்பில் முற்றிலும் சரியான தகவல்களைக் கூறவில்லை.

"

எமது நாட்டிலுள்ள கையடக்கத் தொலைபேசி பாவனையாளர் ஒருவர் ரூ.5,000 ஐ செலுத்தும் போது (கையடக்கத் தொலைபேசி பாவனைக் கட்டணமாக) ரூ.1,600 வரியாகச் செலுத்தப்படுகின்றது.

திவயின | அக்டோபர் 26, 2018

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ன யாப்பா தெரிவித்த பின்வரும் கூற்றை திவயின பத்திரிகை 26 ஆம் திகதி ஒக்டோபர் மாதம் 2018 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது:

எமது நாட்டிலுள்ள கையடக்கத் தொலைபேசி பாவனையாளர் ஒருவர் ரூ.5,000 ஐ செலுத்தும் போது (கையடக்கத் தொலைபேசி பாவனைக் கட்டணமாக) அதில் ரூ.1,600 வரியாகச் செலுத்தப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது என்ன என்றால், கையடக்கத் தொலைபேசி பாவனையாளரின் பில் கட்டணம் 5,000 ரூபாவாக இருந்தால், அதில் 1,600 ரூபா வரியாக செலுத்தப்படுகின்றது. மீதி 3,400 ரூபா கையடக்கத் தொலைபேசி நிறுவனத்திற்கு பாவனைக் கட்டணமாக செலுத்தப்படுகின்றது. இதன் மூலம் பாவனைக் கட்டணத்திற்கான வரியாக 47.05 வீதம் அறவிடப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கின்றார்.

அவர் சொல்வது சரியா?

அவருடைய கூற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு, நாட்டின் பாரிய தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் நிறுவனம் அளித்துள்ள தகவல்களை நாங்கள் ஆராய்ந்தோம்.

பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்த காலப்பகுதியில், பல்வேறு வகையான கையடக்கத் தொலைபேசி சேவைகளுக்கான பயன்பாட்டுக் கட்டணங்களுக்கு டயலொக் நிறுவனம் அறவிடும் வரி வீதத்தினை அட்டவணை 1 காட்டுகின்றது.

அட்டவணை 1 இல் குறிப்பிட்டுள்ளவாறு, குரல் அழைப்புக்கள் மற்றும் மதிப்புக்கூட்டுச் சேவைகளை பயன்படுத்துவதற்கான வரியாக டயலொக் நிறுவனம் 49.67 வீதத்தை அறவிடுகின்றது. இது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட 47.05 வீதத்திற்கு அருகில் உள்ளது.

எனினும், பிற சேவைகளை பயன்படுத்துவதற்கான வரி வீதம் 19.74 வீதம் என்பதனை அட்டவணை 1 காட்டுகின்றது. இது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட வீதத்தினை விடக் குறைவாகும். எனவே குரல் அழைப்புக்கள் மற்றும் மதிப்புக்கூட்டுச் சேவைகள் தவிர பிற சேவைகளைப் பயன்படுத்தும் போது, கையடக்கத் தொலைபேசி பாவனைக் கட்டணமாக ரூ.5,000 செலுத்தினால் ரூ.825 மாத்திரமே வரியாக செலுத்தப்படுகின்றது. மாறாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டது போன்று ரூ.1,600 அல்ல.

எனவே, கையடக்கத் தொலைபேசியை குரல் அழைப்புக்கள் மற்றும் மதிப்புக்கூட்டுச் சேவைகளுக்காக பயன்படுத்தினால்  மாத்திரமே அமைச்சரின் கூற்று சரியானது. எனினும், கையடக்கத் தொலைபேசிகள் குறிப்பிட்ட இந்த சேவைகளுக்காக மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றது என கருதினால் அது தவறாகும். இலங்கையில், கையடக்கத் தொலைபேசிகள் இணையப் பாவனையூடன் தொடர்புடைய சேவைகள் மற்றும் சர்வதேச அழைப்புக்களை மேற்கொள்ளப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக, பாவனைக் கட்டணத்திற்கான வரி 47.05 வீதத்தை விடக் குறைவாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த வரி வீதமானது குறிப்பிட்ட சேவைகளுக்கு மாத்திரமே சரியானது என்பதனால், நாங்கள் அவருடைய கூற்றினை ‘பகுதியளவில் உண்மையானது’ என வகைப்படுத்துகின்றௌம்.

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: பல்வேறு வகையான கையடக்கத் தொலைபேசி

சேவைகளுக்கான வரி வீதம்



மூலம்

  • https://www.dialog.lk/tax: 30 ஒக்டோபர் 2018 அன்று.
  • தயவூசெய்து கவனத்தில் கொள்ளவூம்: பாராளுமன்ற உறுப்பினர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டதன் பின்னர், நொவம்பர் 2018 ஆம் ஆண்டு மேலே குறிப்பிடப்பட்டுள்ள சேவைகளுக்கான வரி வீதங்கள் திருத்தியமைக்கப்பட்டன. புதிய வரி வீதங்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள இணைப்பினை பார்வையிடவூம்.