மைத்திரிபால சிறிசேன

வறுமை நிலை தொடர்பில் ஜனாதிபதி சிறிசேனவின் கூற்று: தரவு காலாவதியானது.

"

நாட்டின் வறிய சனத்தொகையின் விகிதம் 6.7 வீதமாக காணப்படுகின்றது...

சுதந்திர தின உரை | பிப்ரவரி 4, 2019

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

2019 பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது உரையாற்றிய ஜனாதிபதி பின்வரும் கருத்தினை வெளியிட்டிருந்தார்.

நாட்டின் வறிய சனத்தொகையின் விகிதம் 6.7 வீதமாக காணப்படுகின்றது

ஜனாதிபதி தனது அறிக்கையில் காலாவதியான தரவுகளை பயன்படுத்தியுள்ளதை, குடித்தன வருமானம் மற்றும் செலவீன கணக்கெடுப்பின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

நாட்டின் வறுமை வீதம் 6.7 சதவீதம் என அறிக்கையிடப்பட்டுள்ளது, எனினும் இந்த சதவீதமானது குடித்தன வருமான, செலவீன கணக்கெடுப்பின் 2012/2013 ஆம் ஆண்டுக்குரிய தரவுகள் ஆகும். அதற்கு அடுத்ததும், சமீபத்தியதுமான கணக்கெடுப்பு 2016 ஆம் ஆண்டில் முழுமையடைந்தது. அந்த அறிக்கையில் வறுமை வீதமானது 4.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. எனவே, ஜனாதிபதி காலாவதியான தரவுகளை தற்போதைய தரவுகளாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலே குறிப்பிட்டுள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதியின் கூற்றினை ‘பகுதியளவில் உண்மையானது’ என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.

எமது மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வறுமை தொடர்பான அனைத்து தரவுகளும் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட தரவுகளாகும்.

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.மூலம்

  • வறுமை குறிகாட்டிகள், தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம், பார்வையிட:
  • http://bit.do/poverty-bulletin