சஜித் பிரேமதாச

வருமான ஏற்றத்தாழ்வு தொடர்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச  காலாவதியான புள்ளிவிபரங்களை  தெரிவித்துள்ளார். 

"

தேசிய வருமானத்தில் 54 சதவீதத்தை 20 சதவீத செல்வந்தர்கள் அனுபவிக்கின்றனர். அதேவேளை, மிக வறுமையில் உள்ள 20 வீதமானவர்கள் வெறுமனே 4 சதவீதத்தை மாத்திரமே அனுபவிக்கின்றனர்.

லங்காதீப | ஜூலை 9, 2020

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

வருமான ஏற்றத்தாழ்வு தொடர்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச காலாவதியான புள்ளிவிபரங்களை தெரிவித்துள்ளார்

நாட்டின் மிக உயர்ந்த (செல்வந்த) மற்றும் மிகக்குறைந்த (வறுமையான) வருமானத்தைப் பெறுபவர்களுக்கு இடையிலான வருமான வேறுபாட்டை மேற்கோள் காட்டுவதன் மூலம் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச இலங்கையில் வருமான ஏற்றத்தாழ்வின் தீவிரத்தை சுட்டிக்காட்டுகின்றார். அவர்களுடைய வருமானத்தின் பங்கினை முறையே 54 சதவீதம் மற்றும் 4 சதவீதம் என அவர் குறிப்பிடுகின்றார்.

மிக உயர்ந்த மற்றும் மிகக்குறைந்த வருமானங்களுக்கு இடையிலான சமத்துவமின்மையை கணக்கிடுவதற்கு நிலையான பொருளாதார புள்ளிவிபரமாக வருமான குவின்டில் விகிதம் (IQR) பயன்படுத்தப்படுகின்றது – இதற்கான விளக்கத்தினை கீழே பார்க்கவும். அமைச்சர் குறிப்பிட்ட எண்களின் பிரகாரம் இந்த விகிதம் 13.5 ஆகும் (54/4 என கணக்கிடப்பட்டுள்ளது). மிக உயர்ந்த மற்றும் மிகக்குறைந்த குவின்டில்களுக்கு இடையிலான வருமான பங்கில் 50 வீத இடைவெளி காணப்படுவதை இந்த எண்கள் காட்டுகின்றன (54/4 என கணக்கிடப்பட்டுள்ளது).

அமைச்சரின் கூற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு இலங்கை வீட்டு அலகுகளின் வருமானம் மற்றும் செலவின ஆய்வுகளின் (HIES) சமீபத்திய புள்ளிவிபரங்களை FactCheck ஆராய்ந்தது. IQR மற்றும் வருமான பங்கின் இடைவெளி ஆகிய இரண்டுக்கும் எதிரான அமைச்சர் குறிப்பிட்ட எண்ணிக்கையை அட்டவைண 1 மதிப்பீடு செய்கின்றது.

1.            வருமான குவின்டில் விகிதம் (IQR): ‘வருமான குவின்டில் விகிதம்’ (20:20 விகிதம் எனவும் அழைக்கப்படுகின்றது) மிக உயர்ந்த குவின்டிலின் வருமானப் பங்கை மிகக் குறைந்த குவின்டிலின் வருமானப் பங்கின் விகிதமாக கணக்கிடுகின்றது. 2016 ஆம் ஆண்டுக்குரிய தரவுகளின் பிரகாரம் (சமீபத்திய கிடைக்கக்கூடிய HIES) IQR 10.6 ஆகும். அதாவது இலங்கையில் உள்ள 20 சதவீத செல்வந்தர்கள் ஏழ்மையான 20 வீத குடும்பங்களின் 10.6 மடங்கு வருமானத்தை அனுபவிக்கின்றனர். அமைச்சர் குறிப்பிட்டது போன்று 13.5 மடங்கு அல்ல.

2.            வருமான பங்கில் இடைவெளி: மிக உயர்ந்த மற்றும் மிகக்குறைந்த குவின்டில்களுக்கு இடையிலான வருமான பங்கின் வித்தியாசத்தை நாங்கள் கணக்கிட்டோம். 2016 ஆம் ஆண்டில் இந்த இடைவெளி 46 வீதம், அமைச்சர் குறிப்பிட்டது போன்று 50 சதவீதம் அல்ல. இது ஏனென்றால் அமைச்சர் குறிப்பிட்ட புள்ளிவிபரங்கள் மிக உயர்ந்த மற்றும் மிகக்குறைந்த குவின்டில்களுக்கான சமீபத்திய வருமான பங்குகளுடன் வித்தியாசப்படுகின்றது. (சுமாராக 6 மற்றும் 17 வீதங்களினால்). எனினும், 2009/10 மற்றும் 2006/07 ஆம் ஆண்டுக்குரிய கடந்த கால வீட்டு வருமானம் மற்றும் செலவின ஆய்வின் புள்ளிவிபரங்கள் அமைச்சரின் கூற்றுடன் பொருந்திப் போகின்றன. (அட்டவணை ஒன்றை பார்க்கவும்).

அமைச்சர் குறிப்பிட்ட இரண்டு எண்களின் தவறு காரணமாக அமைச்சரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட வருமான ஏற்றத்தாழ்வு விகிதத்தில் தவறினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மிக குறைந்த குவின்டிலுக்கான வருமானப் பங்கினை குறைத்து மதிப்பிடுவதுடன், மிக உயர்ந்த குவின்டிலுக்கான வருமானப் பங்கினை மிகைப்படுத்தி மதிப்பிட்டுள்ளார்கள்.

காலாவதியான புள்ளிவிபரங்களை பயன்படுத்தியதால் அமைச்சர் பிரேமதாச இலங்கையின் வருமான ஏற்றத்தாழ்வினை மிகைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளார். எனவே நாங்கள் அவரது கூற்றினை தவறானது‘ என வகைப்படுத்துகின்றோம்.

குறிப்பு: அமைச்சருடைய அறிக்கையில் அவர் வீட்டலகுகள் அல்லது தனிநபர்களைப் பொறுத்தவரை குவின்டிலை குறிப்பிடுகின்றாரா என்பது குறித்து தெளிவற்றதாக காணப்படுகின்றது (ஏனென்றால் வீட்டலகின் அளவு மாறுபடுவதால் இரண்டு புள்ளிவிபரங்களும் சமமானவை இல்லை).  அவரது கூற்றுக்கு நெருக்கமாக இருப்பதனால் நாங்கள் அதனை வீட்டலகுகள் என்றே அர்த்தப்படுத்திக் கொள்கின்றோம்.

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.

அட்டவணை 1வீட்டு வருமான புள்ளிவிபரங்கள் (2006/07 -2016) மூலம்

  • தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், வீட்டலகுகள் வருமான மற்றும் செலவின ஆய்வு 2006/07, பக்கம் VII, பார்வையிட: http://www.statistics.gov.lk/HIES/HIES2006_07Website/Publications/HIES200607Final%20ReportWeb%20.pdf
  • தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், வீட்டலகுகள் வருமான மற்றும் செலவின ஆய்வு 2006/07, அட்டவணை 2.2, பார்வையிட: http://www.statistics.gov.lk/HIES/HIES2006_07Website/Publications/HIES200607Final%20ReportWeb%20.pdf
  • தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், வீட்டலகுகள் வருமான மற்றும் செலவின ஆய்வு 2009/10, பக்கம் VII, பார்வையிட: http://www.statistics.gov.lk/HIES/HIES2009_10FinalReportEng.pdf
  • தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், வீட்டலகுகள் வருமான மற்றும் செலவின ஆய்வு 2009/10, அட்டவணை 2.2, பார்வையிட: http://www.statistics.gov.lk/HIES/HIES2009_10FinalReportEng.pdf
  • தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், வீட்டலகுகள் வருமான மற்றும் செலவின ஆய்வு 2012/13, பக்கம் VII, பார்வையிட: http://www.statistics.gov.lk/HIES/HIES2012_13FinalReport.pdf
  • தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், வீட்டலகுகள் வருமான மற்றும் செலவின ஆய்வு 2012/13, அட்டவணை 2.2, பார்வையிட: http://www.statistics.gov.lk/HIES/HIES2012_13FinalReport.pdf
  • தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், வீட்டலகுகள் வருமான மற்றும் செலவின ஆய்வு 2016 (2018), பக்கம் VII, பார்வையிட: http://www.statistics.gov.lk/HIES/HIES2016/HIES2016_FinalReport.pdf
  • தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், வீட்டலகுகள் வருமான மற்றும் செலவின ஆய்வு 2016 (2018), அட்டவணை 2.2, பார்வையிட: http://www.statistics.gov.lk/HIES/HIES2016/HIES2016_FinalReport.pdf