பேராசிரியர் வசந்த அத்துக்கோரள

பேராசிரியர் அத்துக்கோரள வரவு செலவுத் திட்டத்தில் எந்தவித அமைப்பியல் மாற்றமும் இல்லை என்கின்றார்

"

கடந்த ஆண்டில் மூலதனச் செலவினங்களுக்காக 31% ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேவேளை மீண்டுவரும் செலவினங்களுக்காக 69% ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டும் கூட இந்த விகிதாச்சாரங்களில் எந்த மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. […] எனவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் அமைப்பியல் மாற்றம் ஏ

அருண | ஜனவரி 16, 2025

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடையே நிதி ஒதுக்கீட்டில் ‘அமைப்பியல்’ மாற்றம் எதுவும் இல்லை என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் வசந்த அத்துக்கோரள வாதிடுகின்றார். இரண்டு ஆண்டுகளிலும் வரவு செலவுத்திட்டத்தின் 31% மூலதனச் செலவினத்திற்காகவும் 69% மீண்டுவரும் செலவினத்திற்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு அவர் தனது கூற்றுக்கு வலுச்சேர்க்கின்றார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், இலங்கை மத்திய வங்கியின் 2024 ஆண்டறிக்கை, அரசாங்க நிதிப் புள்ளிவிபரக் கையேடு 2014 ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

அனைத்துச் செலவினங்களையும் உள்ளடக்காத ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் முதலாவது தொகுதியில் இருந்து மட்டும் பேராசிரியர் பெறுமதிகளைக் குறிப்பிடுகின்றார் என்பதை அட்டவணை 1 காட்டுகின்றது. முதலாவது தொகுதியில் உள்ளடக்கப்படாத மிகப்பெரிய கூறு வட்டிச் செலவினங்கள் ஆகும். மேலும் இது இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகள் மற்றும் அரசாங்க நிதிப் புள்ளிவிபரக் கையேட்டின் பிரிவு 4.24 (பக்கங்கள் 71 மற்றும் 114) ஆகியவற்றில் காணப்படுவது போன்று வரவு செலவுத்திட்டத்தில் செலவினமாக வகைப்படுத்தப்படுகின்றது.

மொத்தச் செலவினம் மற்றும் முதன்மைச் செலவினம் (அதாவது மொத்தச் செலவினத்திலிருந்து வட்டிக் கொடுப்பனவுகளைக் கழித்தால் வருவது) ஆகிய இரண்டிலும் 2024 மற்றும் 2025 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் நிதி ஒதுக்கீட்டில் எந்தவிதமான அமைப்பியல் மாற்றமும் இல்லை (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). எனினும் பேராசிரியர் மேற்கோள் காட்டும் பெறுமதிகள் மொத்தச் செலவினத்திற்கானது அல்ல, அவை முதன்மைச் செலவினத்திற்கானது.

மொத்தத்தில், 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் அமைப்பியல் மாற்றத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை என்ற பேராசிரியரின் வாதம் சரியானது. மேலும் அவர் குறிப்பிடும் பெறுமதிகள் வரவு செலவுத்திட்டத்தின் முதன்மைச் செலவினக் கூறுகளைச் சரியாகப் பிரதிபலிக்கின்றது. எனினும் அவர் மொத்த மற்றும் முதன்மைச் செலவினங்களுக்கு இடையிலான வேறுபாட்டைக் கவனிக்கத் தவறிவிட்டார்.

எனவே பேராசிரியரின் கூற்றை நாங்கள் சரியானது என வகைப்படுத்துகின்றோம்.

மேலதிகக் குறிப்பு: வட்டிக் கொடுப்பனவுகளைத் தவிர்த்தால் மீண்டுவரும் செலவினங்கள் 68% என்பதை 2000 ஆம் ஆண்டு முதல் செலவினங்களின் சராசரியும் உறுதிப்படுத்துகின்றது.

 

அட்டவணை 1: 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் மீண்டுவரும் செலவினத்தின் பங்கு

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனதுமுடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2025, நிதி அமைச்சு. https://www.treasury.gov.lk/web/appropriation-act/section/2025

ஆண்டறிக்கைகள், இலங்கை மத்திய வங்கி. https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports

அரசாங்க நிதிப் புள்ளிவிபரக் கையேடு, சர்வதேச நாணய நிதியம். https://www.imf.org/external/pubs/ft/gfs/manual/2014/gfsfinal.pdf

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன