பாட்டலி சம்பிக்க ரணவக்க

ஜப்பானின் கடன் உதவிகள் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரியாகவே தெரிவிக்கின்றார்.

"

ஒரு நாடாக, ஜப்பான் குறைந்த வட்டி வீதத்தில் அதிக கடன்களை வழங்கியுள்ளது

அருண | ஜூன் 16, 2020

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இலங்கைக்கான வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பிலான தரவுகளைப் பயன்படுத்தி FactCheck மதிப்பிட்டது. இந்த பகுப்பாய்வானது கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, 2005 முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் பெறப்பட்ட கடன்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது (அட்டவணை 1).

இந்தக் காலப்பகுதியில், கடன்களின் மதிப்பைப் பொறுத்தவரை – சர்வதேச இறையாண்மை பத்திரங்களைத் தவிர்த்து – இலங்கை கடன்பெறும் மூன்றாவது பாரிய மூலமாக ஜப்பான் காணப்படுகின்றது. மேலும், சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய இருதரப்பு கடன் வழங்குனராகவும் ஜப்பான் காணப்படுகின்றது.

அத்துடன் ஜப்பான் மிகவும் சாதகமான வகையில் கடன்களை வழங்கியுள்ளது. ஜப்பான் கடன்களின் வட்டி வீதத்தின் சராசரி 0.73% என அட்டவணை 1 காட்டுகின்றது. இது சீனா போன்ற பிற இருதரப்பு கடன் வழங்குனர்கள் மற்றும் உலக வங்கி போன்ற பலதரப்பு அமைப்புக்கள் உட்பட பிற கடன் வழங்குனர்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவு குறைவாகும்.

அத்துடன், அமெரிக்க டொலர்களில் இந்தக் கடன்களுக்கான வட்டி வீதம் மேலும் குறைவாகும். (அ) அனைத்துக் கடன்களும் JPY (ஜப்பானிய யென்னில்) குறிப்பிடப்படுகின்றன – இந்தக் காலப்பகுதியில் ஜப்பானிய யென் அமெரிக்க டொலர்களுக்கு எதிராக மதிப்பிழந்தது, மற்றும் (ஆ) திருப்பிச் செலுத்துவதற்கு முன்னர் மேலதிக காலம் போன்ற சலுகை விதிமுறைகளை உள்ளடக்கியுள்ளது.

எனவே, 2005 – 2019 காலப்பகுதியில், இலங்கைக்கு அதிக மதிப்பிலான கடன்களை குறைந்த வட்டி வீதத்தில் ஜப்பானே வழங்கியுள்ளது.

எனவே நாங்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை ‘சரியானது’ என வகைப்படுத்துகின்றோம்.

கவனத்தில் கொள்ளவும்: இந்த உண்மை சரிபார்ப்பில் பயன்படுத்தப்பட்ட கணக்கீடுகள் தொடர்பில் மேலும் அறிந்துகொள்வதற்கு, இலங்கையின் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான வெளிநாட்டு நிதியுதவிஉட்கட்டமைப்புக்கான நிதியுதவிசலுகை கடன்கள் மிக விலையுயர்ந்ததாக இருக்க முடியுமாஎன்ற வெரிட்டே ரிசேர்ச்சின் வரவிருக்கும் அறிக்கையைப் பார்க்கவும்.

1.ஏதாவது ஒரு காலப்பகுதியில் மாறக்கூடிய கூறுகளைக் கொண்ட வட்டி வீதங்களைக் கொண்ட கடன்கள் ‘மாறும் வட்டி வீதம்’ என வகைப்படுத்தப்படுகின்றது.

2. மாறக்கூடிய வட்டி வீதமானது லண்டன் இன்டர்பாங்க் சலுகை விகிதம் (LIBOR) + மார்ஜின் வீதம் என கணக்கிடப்படுகின்றது. மாறக்கூடிய வட்டிகளைக் கொண்ட கடன்களுக்கான வீதம் சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய மதிப்பினை கண்காணிப்பதில் (The Present Value (PV) Monitoring Tool) இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீடுகளின் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த வீதமானது 10 ஆண்டுகளில் (2020 – 2029) ஆறு மாதங்களுக்கான சராசரி திட்டமிடப்பட்ட USD LIBOR விகிதத்தை அடிப்படையாகக் கொண்டது.

3. வெவ்வேறு காலப்பகுதிக்கு மாறுபட்ட வட்டி வீதங்களைக் கொண்ட கடன்கள் காணப்படும் போது, உயர்ந்த வட்டி வீதம் கணக்கீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கடன்களுக்கான சேவைகள்/ஆலோசனைக் கட்டணங்கள் வட்டி வீத மதிப்பீட்டில் உள்ளடக்கப்படவில்லை.மூலம்