மைத்திரிபால சிறிசேன

ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக ஜனாதிபதி தவறான தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

"

சுமார் 16 அல்லது 17 வீதமான இலங்கையர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

லங்காதீப | அக்டோபர் 18, 2018

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

அவருடைய கூற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு, நாங்கள் ஊட்டச்சத்து தொடர்பான சர்வதேச புள்ளிவிபரங்களை ஆராய்ந்தோம்.

“ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வரம்பை விட உணவு ஆற்றல் நுகர்வு குறைவாக இருக்கும் சனத்தொகையின் வீதம்” ஊட்டச்சத்து குறைபாடு என வரைவிலக்கணப்படுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) தெரிவிக்கின்றது. மேலும் இது மூன்று ஆண்டுகளின் நகரும் சராசரியாக அளவிடப்படுகின்றது.

ஐ.நா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் அட்டவணை 1 இல் குறிப்பிடப்பட்டுள்ளன.

அட்டவணை 1 இல் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று, 2015 – 2017 காலப்பகுதியில் இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடுடைய சனத்தொகையின் வீதம் 10.9 வீதமாகக் காணப்படுகின்றது. இது ஜனாதிபதி குறிப்பிட்ட வீதத்தினை விடக் குறைவாகும். 2008 ஆம் ஆண்டு முதல் ஊட்டச்சத்து குறைபாடு 16 – 17 என்ற உயர் வீதத்தைக் கொண்டிருக்கவில்லை.

எனவே, ஜனாதிபதியின் கூற்றினை “தவறானது” என வகைப்படுத்துகின்றோம்.

ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பில் நாங்கள் வேறு என்ன தெரிந்துகொள்ள வேண்டும்.

ஊட்டச்சத்து குறைபாட்டினை அளவிடுவதற்கு, குறிப்பாக 5 வயதிற்கு குறைவான குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை அளவிடுவதற்கு மேலும் சில அளவீடுகள் உள்ளன.

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினை அளவிடுவதற்கு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யூனிசெப்) பின்வரும் அம்சங்களைக் குறிப்பிடுகின்றது.
– ஒருவரின் வயதிற்கு எடை குறைவாக இருத்தல்
– ஒருவரின் வயதிற்கு உயரம் குறைவாக இருத்தல்
– ஒருவருடைய உயரத்திற்கு மிகவும் மெலிந்த தோற்றத்தினைக் கொண்டிருத்தல்
– விட்டமின்கள் மற்றும் தாதுக்களின் குறைபாடு

இலங்கையில் 5 வயதிற்கு குறைவான குழந்தைகளில் 20 வீதமானவர்கள் எடை குறைவாக இருப்பதாகவும், 15 வீதமானவர்கள் மெலிந்த தேகத்தைக் கொண்டிருப்பதாகவும், 17 வீதமானவர்கள் உயரம் குறைவாக இருப்பதாகவும் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டுகின்றது.

உலகளாவிய பசி அட்டவணை பல்வேறு காரணிகளைக் கொண்டு பசியினை அளவிடுவதுடன்இ அதன் பிரகாரம் பசியினால் வாடும் நாடுகளை தரவரிசைப்படுத்துகின்றது.

இதில் கவனத்தில் கொள்ளப்படும் காரணிகள்:
-ஊட்டச்சத்துக் குறைபாடு (ஐ.நா உணவூ மற்றும் வேளாண்மை அமைப்பின் வரைவிலக்கணம் – மேலே குறிப்பிடப்பட்டுள்ளது)
-5 வயதிற்கு குறைந்த சிறுவர்களின் இறப்பு வீதம், இது விட்டமின் மற்றும் தாதுக்குறைபாட்டை சுட்டிக்காட்டுகின்றது (இலங்கையில் 0.9 சதவீதம்)
-5 வயதிற்கு குறைவான சிறுவர்களில்இ வயதிற்கு ஏற்ற உயரம் இல்லாதிருப்பது மற்றும் உயரத்திற்கு மிகவும் மெலிந்த தோற்றத்தினைக் கொண்டிருப்பது (மேலே குறிப்பிடப்பட்டுள்ளது)

இந்த அளவீடுகளின் பிரகாரம், 2018 ஆம் ஆண்டில் தகுதிபெற்ற 119 நாடுகளில் இலங்கை 65 ஆவது இடத்தை பிடித்தது.

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: இலங்கையில் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள சனத்தொகையின் வீதம் (3 ஆண்டுகளின் சராசரி, 1999 – 2017)மூலம்