ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் 2026 வரவுசெலவுத் திட்ட உரையில் இருந்து மொத்தம் 3 கூற்றுக்களை (statements) இந்தக் குழு உண்மைச் சரிப்பார்ப்பு (fact-check) செய்தது. அவற்றில் இரண்டு கூற்றுக்கள் ‘சரியானவை’ (True) என்றும், ஒரு கூற்று ‘பகுதியளவு சரியானவை’ (Partly True) என்றும் தரப்படுத்தப்பட்டன.
பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் வலுவான வளர்ச்சியின் காரணமாக, 2025 ஆம் ஆண்டின் முதல்பாதியில் பொருளாதாரம் 4.8% வளர்ச்சி அடைந்தது. பலதரப்பு அமைப்புகளின் கணிப்புகளையும் விட இதுஅதிகமானது.
உண்மைச் சரிபார்ப்பு: மார்ச்/ஏப்ரல் மாத நிலவரப்படி, சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி (World Bank), மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) உள்ளிட்ட பலதரப்பு அமைப்புகள், 2025 ஆம் ஆண்டின் பொருளாதாரவளர்ச்சியை 3.0% முதல் 3.9% வரை இருக்கும் என மதிப்பிட்டிருந்தன. முதல் பாதியில் மட்டும் இலங்கையின்பொருளாதாரம் 4.8% வளர்ச்சி அடைந்து, இந்த ஆண்டு கணிப்புகளை விஞ்சியுள்ளது.
Verdict: சரியானது (TRUE)
2026 ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) சதவீதமாக தேசிய வருமானம், 2006 ஆம் ஆண்டுக்குப்பிறகு பதிவாகிய 16% என்ற அளவை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மிக நெருக்கமாக எட்டும்.
உண்மைச் சரிபார்ப்பு:
2007 ஆம் ஆண்டில் (இதுவே குறிப்பிடப்பட்ட ஆண்டாகத் தெரிகிறது) இலங்கையின் அரச வருமானம் 16.6% ஆகஇருந்தது. அதன் பின்னர், வருமானம் வீழ்ச்சியடைந்து, எப்போதும் 16% இற்குக் குறைவாகவே இருந்தது, மேலும் 2022 ஆம் ஆண்டில் 8.5% ஆகக் குறைந்திருந்தது. எனவே, 2026 ஆம் ஆண்டிற்கான தற்போதைய வருமான எதிர்பார்ப்பான15.3%, 2007 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மிக உயர்ந்ததாகும்.
Verdict: சரியானது (TRUE)
மூலம்: மத்திய வங்கி ஆண்டறிக்கை பொருளாதார ஆய்வு 2024 - விசேட புள்ளிவிபர பின்னிணைப்பு
…2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாங்கள் நெருக்கடிக்கு முந்தைய பொருளாதார நிலையை அடைய முடியும் என்பதை நான்உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
உண்மைச் சரிபார்ப்பு: மற்ற இடங்களில், ஜனாதிபதி “நெருக்கடிக்கு முந்தைய பொருளாதார நிலையை” 2019 ஆம் ஆண்டாக(கடன் மீள்செலுத்த முடியாமை மற்றும் கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்) குறிப்பிடுகிறார்.
ஜனாதிபதி பொருளாதார நன்மையின் முக்கிய அளவீடுகளை வரையறுக்காததால், இலங்கையின் நெருக்கடி மற்றும் மீட்சிக்குப்பொருத்தமான நான்கு முக்கிய பொருளாதாரக் குறிகாட்டிகளின் அடிப்படையில் அவரது கூற்றை நாங்கள் மதிப்பீடு செய்தோம்: மொத்தஉள்நாட்டு உற்பத்தி (GDP), வறுமை, வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டு கையிருப்பு.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP): திருத்தப்பட்ட 2025 வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளின் கீழ், இலங்கையின் மொத்தஉள்நாட்டு உற்பத்தி ரூ. 32,036 பில்லியனாக பெறப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது, இது உண்மையான அடிப்படையில் (real terms) 2019-ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 98.7%-க்கு சமமானது.
வறுமை: 2019-ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கம் அதன் வறுமை புள்ளிவிவரமான 14.3%-ஐ புதுப்பிக்கவில்லை. அரசாங்கத்தால்அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் மாற்றீடான உலக வங்கி மதிப்பீட்டைப் பயன்படுத்தினால், 2025-ஆம் ஆண்டுக்கான அதன்மதிப்பீட்டுடன் ஒப்பிடும்போது 2019 புள்ளிவிவரமானது, வறுமை இன்னும் 2019-ஆம் ஆண்டு அளவை விட கிட்டத்தட்ட இருமடங்காக இருப்பதைக் காட்டுகிறது, எனவே இன்னும் முழுமையாக மீட்சி அடையவில்லை.
வேலைவாய்ப்பு: நிலையான அளவீடான, “15+ வயதுடைய மக்களில் வேலைவாய்ப்புப் பெற்றவர்களின் பங்கு” 2019-ஆம்ஆண்டில் 50%-லிருந்து 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 47.5%-ஆகக் குறைந்துள்ளது. இது பொருளாதாரநெருக்கடிக்கு முந்தைய (2019) நிலையை அடைவதற்கான சுமார் 430,000 வேலைவாய்ப்புகள் குறைவாகவுள்ளன.
அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் வேலையின்மை விகிதத்தில் ஏற்படும் மாற்றம், இந்த பொருளாதார மீட்சி மதிப்பீட்டிற்குப்பொருத்தமற்றது, ஏனெனில் அந்த புள்ளிவிவரம் வரையறுக்கப்பட்டுள்ள விதம் காரணமாகும். மக்கள் தீவிரமாக வேலைதேடிக்கொண்டிருந்தனர் என்பதை அவர்களால் நிரூபிக்க முடியாவிட்டால், அவர்கள் “தொழிற்படையில் இல்லாதவர்கள்” (not in the labour force) என்று கணக்கிடப்படுவார்கள், வேலையில்லாதவர்கள் என்று அல்ல.
Verdict: PARTLY TRUE
Sources: National Accounts Estimates of Sri Lanka, Department of Census and Statistics
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept All”, you consent to the use of ALL the cookies. However, you may visit "Cookie Settings" to provide a controlled consent.
This website uses cookies to improve your experience while you navigate through the website. Out of these, the cookies that are categorized as necessary are stored on your browser as they are essential for the working of basic functionalities of the website. We also use third-party cookies that help us analyze and understand how you use this website. These cookies will be stored in your browser only with your consent. You also have the option to opt-out of these cookies. But opting out of some of these cookies may affect your browsing experience.
Necessary cookies are absolutely essential for the website to function properly. This category only includes cookies that ensures basic functionalities and security features of the website. These cookies do not store any personal information.
Any cookies that may not be particularly necessary for the website to function and is used specifically to collect user personal data via analytics, ads, other embedded contents are termed as non-necessary cookies. It is mandatory to procure user consent prior to running these cookies on your website.