உண்மைச் சரிபார்ப்புகளும்
இலங்கை 8.3% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளதாக பிரதி அமைச்சர் ரீ. பீ. சரத் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும் போதுதெரிவித்துள்ளார். செப்டம்பர் 2024 ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து தற்போதைய அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்ற காலப் பகுதியைஅவர் தனது உரையில் குறிப்பிடுகின்றார். வளர்ச்சியை மதிப்பிடுவதற்குப் பொருத்தமான தரவு 2024 நான்காம் காலாண்டு மற்றும் 2025 முதலாம்காலாண்டு ஆகும். அதாவது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் ஆட்சியின் முதல் இரண்டு காலாண்டுகள், இதற்கான தரவுகள்வெளியாகியுள்ளன.
இந்தக் கூற்றைச் சரி பார்க்க தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட உத்தியோகபூர்வ மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தரவுகளை FactCheck.lk ஆராய்ந்தது.
2025 நான்காம் காலாண்டு மற்றும் 2025 முதலாம் காலாண்டுகான வளர்ச்சி விகிதங்கள் ஆராயப்பட்டன (மேலே உள்ள காரணங்களைக்காணவும்). அட்டவணை 1 இல் காட்டப்பட்டது போன்று, இந்த இரண்டு காலாண்டுகளிலும் (அதாவது முந்தைய ஆண்டின் அதே காலாண்டுடன் ஒப்பிடப்பட்டது) ஆண்டுக்கு ஆண்டு (YoY) வளர்ச்சி முறையே 5.4% மற்றும் 4.8% ஆகும். இது பிரதி அமைச்சர் குறிப்பிடும் 8.3% என்னும்பெறுமதியை விடக் குறைவாகும். இந்த இரண்டு காலாண்டுகளின் ஒட்டுமொத்த ஆண்டுக்கு ஆண்டு (YoY) வளர்ச்சியான 5.1 சதவீதமும் அவர்குறிப்பிடும் 8.3% விட குறைவாகும்.
பிரதி அமைச்சர் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை வேறொரு பொருளாதாரக் குறிகாட்டியுடன் குழப்பிக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது. வளர்ச்சி பெறுமதிகளில் FactCheck.lk கண்டறிந்த இதற்கு மிக நெருங்கிய பெறுமதி ஜூலை 2024 முதல் ஜனவரி 2025 வரை ஏற்றுமதிவருமானத்தில் ஏற்பட்ட 8.4% வளர்ச்சி ஆகும். ஆனால் ஏற்றுமதிகள் மொத்த GDPயில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே ஆகும்.
மொத்தத்தில், தற்போதைய ஜனாதிபதி செப்டம்பர் 2024 இல் பதவி ஏற்றது முதல் இரண்டு காலாண்டுகளையும் தனித்தனியாக கவனத்தில் கொண்டாலும், அல்லது இரண்டு காலாண்டுகளையும் மொத்தமாக எடுத்துக் கொண்டாலும், எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கை 8.3% எனும்மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்யவில்லை. உண்மையான விகிதங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.
எனவே நாங்கள் பிரதி அமைச்சரின் கூற்றைத் தவறானது என வகைப்படுத்துகின்றோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனதுமுடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: இலங்கையின் GDP வளர்ச்சி விகிதங்கள்
மூலம்
மொத்த உள்நாட்டு உற்பத்தி, தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்.