சுனந்த மத்தும பண்டார

1959 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வளர்ச்சி தொடர்பில் ஜனாதிபதி ஆலோசகர் தவறாகக் குறிப்பிடுகிறார்

"

1959 ஆம் ஆண்டில் இலங்கையின் தலைக்குரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி ஐ.அ.டொ 140 ஆகும். பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டில் இது ஐ.அ.டொ 3,474 ஆகக் காணப்பட்டது. இது நாட்டின் வருமான மட்டத்திலும் மக்களின் வருமான மட்டத்திலும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது. […]

லங்காதீப | மார்ச் 27, 2024

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

… தெற்காசியாவிலுள்ள அனைத்து நாடுகளையும் மிஞ்சும் வகையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை இலங்கையால் எட்ட முடிந்துள்ளது.

ஜனாதிபதி ஆலோசகர் சுனந்த மத்தும பண்டார (அ) 1959 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வருமான மட்டங்களில் ‘பாரிய’ (25 மடங்கு) அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது (ஆ) அதன் வளர்ச்சியானது அனைத்து தெற்காசிய நாடுகளையும் விட சிறப்பாக உள்ளது எனக் குறிப்பிடுகிறார்.

இந்தக் கூற்றுக்களைச் சரிபார்க்க, சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் 2023 மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை 2022 ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

கூற்று (அ): பாரிய அதிகரிப்பு என்பதைக் குறிப்பிடுவதில், பெயரளவு ஐ.அ.டொ பெறுமதியில் தலைக்குரிய மொ.உ.உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்பை ஜனாதிபதி ஆலோசகர் குறிப்பிடுகிறார். எனினும் வருமான மட்டத்தின் வளர்ச்சி (இது வாங்கும் திறன்/உற்பத்திக்கு சமமானது) “பெயரளவு” அடிப்படையில் அளவிடப்படுவதில்லை – ஏனெனில் ஒரு பொருளின் விலையில் ஏற்படும் அதிகரிப்பானது உண்மையான உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்பு இல்லை. இது “உண்மை” அடிப்படையில் அளவிடப்படுகிறது – அதாவது விலை/பணவீக்கம் சரிசெய்யப்பட்ட உற்பத்தியின் அதிகரிப்பு. எனவே “உண்மையான” அளவீடுகள் (i) ரூபாயில்: இலங்கை மத்திய வங்கி அறிக்கையிட்டதன் பிரகாரம், இலங்கையில் உண்மையான தலைக்குரிய மொ.உ.உ வளர்ச்சி அல்லது (ii) ஐ.அ.டொலரில்: அமெரிக்காவில் பொருட்களை வாங்குவதற்கான இலங்கையர்களின் திறனில் ஏற்பட்ட வளர்ச்சி (இலங்கையின் தலைக்குரிய மொ.உ.உற்பத்தியின் பெயரளவு வளர்ச்சியானது ஐ.அ.டொலரில் மாற்றப்பட்டு அமெரிக்காவின் பணவீக்கத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்டது).

“பாரிய” அதிகரிப்பு (25 மடங்கு) எனக் குறிப்பிடுவது ஆண்டொன்றுக்கு “பெயரளவு” ஐ.அ.டொ அடிப்படையில் சராசரியாக 5.2% அதிகரிப்பு என்பதை அட்டவணை 1 காட்டுகிறது. அத்துடன் “உண்மையான” ஐ.அ.டொ அடிப்படையில் ஆண்டொன்றுக்கு 1.9% மட்டுமே ஆகும். எனினும் இந்தக் கூற்றுக்கு மிகவும் பொருத்தமான, இலங்கையில் வாங்கும் திறனின் உண்மையான வளர்ச்சி 1959 ஆம் ஆண்டு முதல் 2022 வரை ஆண்டொன்றுக்கு சராசரியாக 3.6 சதவீதமாக உள்ளது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்).

கூற்று (ஆ): இலங்கை தெற்காசியாவிலுள்ள அனைத்து நாடுகளையும் விடச் சிறப்பாக உள்ளதா? ஒப்பீட்டுக்காக 1980 ஆம் ஆண்டு முதலே FactCheck.lk ஆல் தரவுகளைக் கண்டறிய முடிந்தது.

1980 ஆம் ஆண்டு முதல், மாலைதீவுகள் மற்றும் பூட்டான் “உண்மையான” தலைக்குரிய மொ.உ.உற்பத்தியின் வளர்ச்சியில், உள்ளுர் நாணயம் மற்றும் ஐ.அ.டொ பெறுமதி ஆகிய இரண்டிலும், இலங்கையை விட சிறப்பாக செயற்பட்டுள்ளதை அட்டவணை 2 காட்டுகிறது. மேலதிகமாக, உள்ளுர் நாணயப் பெறுமதியில் இலங்கையை விட இந்தியா சிறப்பாகச் செயற்பட்டுள்ளது.

தெற்காசியாவிலுள்ள ஏனைய அனைத்து நாடுகளையும் விட இலங்கை “பாரிய” வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்பதே கூற்று. “பெயரளவு” வளர்ச்சியை “உண்மை” வளர்ச்சியாகத் தவறாகக் கருதுவதால் “பாரிய” என்பதற்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பகுப்பாய்வு காட்டுகிறது. மேலும் தெற்காசியாவிலுள்ள மூன்று பிற நாடுகள் உண்மையான தலா வருமான வளர்ச்சியில் இலங்கையை விட மிகச் சிறப்பாக உள்ளன (1980 முதல் கிடைக்கும் தரவின் அடிப்படையில்).

ஆகவே நாங்கள் இந்தக் கூற்றை தவறானது என வகைப்படுத்துகிறோம்.

மேலதிகக் குறிப்பு: ஜனாதிபதி ஆலோசகரின் இந்தக் கூற்று ஏனைய மனித அபிவிருத்தி குறிகாட்டிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் பின்னணியில் அமைந்துள்ளது. இந்த உண்மைச் சரிபார்ப்பு வருமான மட்டத்தில் தனிநபர் வளர்ச்சி தொடர்பிலான கூற்றை மட்டுமே மதிப்பிடுகிறது.

 

அட்டவணை 1: ஐ.அ.டொ மற்றும் ரூபாயில் தலைக்குரிய மொ.உ.உற்பத்தியில் மாற்றம்

 

 



மூலம்

உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம், சர்வதேச நாணய நிதியம்,

ஆண்டறிக்கை 2022, இலங்கை மத்திய வங்கி, https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports/annual-report-2022

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன