சஜித் பிரேமதாச

பாராளுமன்ற உறுப்பினர் வறுமையில் வாடும் சிறுவர்கள் குறித்து சரியாகத் தெரிவிக்கின்றார்

"

சர்வதேசப் புள்ளிவிபரங்களுக்கு அமைய, இலங்கையில் 25 சதவீதமான சிறுவர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். […] எமது நாட்டின் சிறுவர்களில் 42 சதவீதமானவர்கள் பல பரிமாண வறுமையால் வாடுவதாகப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

ஹிரு நியூஸ் | ஜூலை 22, 2024

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

சிறுவர் வறுமையை நிவர்த்தி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை வலியுறுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச (i) இந்த நாட்டில் 25 சதவீதமான சிறுவர்கள் (வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட) வறுமையையும் (ii) 42 சதவீதமான சிறுவர்கள் பல பரிமாண வறுமையையும் அனுபவிப்பதாகக் குறிப்பிடுகின்றார்.

இந்தக் கூற்றுக்களைச் சரிபார்க்க, தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் வறுமை தொடர்பான புள்ளிவிபரங்கள், உலக வங்கியின் இலங்கையின் வறுமை மற்றும் சமத்துவ விபரம் 2023 மற்றும் யுனிசெஃப் வெளியிட்ட இலங்கையின் பல பரிமாண வறுமைக் குறியீடு 2019 ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

சிறுவர் வருமான வறுமை: இலங்கையின் வறுமை விகிதம் 2019 ஆம் ஆண்டில் 11.3% எனவும் 2023 ஆம் ஆண்டில் 25% எனவும் உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் ஐ.அ.டொ 3.65 பெறுமதியான பொருட்களை நுகர்வதற்கு இலங்கையில் தனிநபர் ஒருவருக்குத் தேவைப்படும் நாளாந்த வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட வறுமைக்கோட்டை இந்த மதிப்பீடு பயன்படுத்துகின்றது. சிறுவர் வறுமை தொடர்பில் உலக வங்கி குறிப்பாக அறிக்கையிடவில்லை.

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் வறுமை தொடர்பில் கிடைக்கும் சமீபத்திய புள்ளிவிபரம் 2019 ஆம் ஆண்டுக்கு உரியது. இது 14.3% ஆக உள்ளதுடன், உலக வங்கியின் அதே ஆண்டுக்கான மதிப்பீட்டை விட சற்று அதிகமாகவுள்ளது. 2019 ஆம் ஆண்டில் 0-17 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் வறுமை 16.8% எனவும் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் அறிக்கையிட்டுள்ளது. ஒட்டுமொத்த வறுமையை விட சிறுவர் வறுமை அதிகமாக இருப்பதை எதிர்பார்ப்பது நியாயமானது. ஏனெனில் அதிக பிள்ளைகளை உடைய வீடுகளில் நபர் ஒருவருக்கான சராசரி வருமானம் குறைவாக இருக்கும்.

எனவே உலக வங்கியின் புள்ளிவிபரங்களிலும் 2023 ஆம் ஆண்டில் சிறுவர் வறுமை 25 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாசவின் கூற்றுடன் பொருந்துகின்றது.

சிறுவர் பல பரிமாண வறுமை: இலங்கையின் சிறுவர் பல பரிமாண வறுமைக் குறியீடு (MPI) 0-4 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத்தரம் மற்றும் சிறுவர் அபிவிருத்தி போன்ற விடயங்களில் அனுபவிக்கும் குறைபாடுகளைக் கவனத்தில் கொள்கின்றது. 2019 தரவுகளின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டில் வெளியான அறிக்கையில் சிறுவர் பல பரிமாண வறுமை 42.2% எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக வங்கி மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றின் புள்ளிவிபரங்களும் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாசவின் சிறுவர் வறுமை தொடர்பான கூற்றுக்களை ஆதரிக்கின்றன. எனவே அவரது அறிக்கையை நாங்கள் சரியானது என வகைப்படுத்துகின்றோம்.

 மேலதிகக் குறிப்பு: பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் இரண்டு புள்ளிவிபரங்களும் வெவ்வேறு வயதுடைய சிறுவர்களுக்குப் பொருந்தும். 25% வருமான வறுமை புள்ளிவிபரம் 0-17 வயதுடைய சிறுவர்களுக்குப் பொருந்தும். பல பரிமாண வறுமைக் குறியீடு புள்ளிவிபரம் 0-4 வயதுடைய சிறுவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இது 5-17 வயதுடைய சிறுவர்களின் பல பரிமாண வறுமையை மதிப்பிடுவதில்லை.



மூலம்

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம், ஏப்ரல் 2022, வறுமைக் குறிகாட்டிகள் 2019. http://www.statistics.gov.lk/Poverty/StaticalInformation/PovertyIndicators-2019 என்னும் இணைப்பின் மூலம் பெறப்பட்டது.

உலக வங்கியின் வறுமை மற்றும் சமத்துவ விபரம், ஏப்ரல் 2023. https://databankfiles.worldbank.org/public/ddpext_download/poverty/987B9C90-CB9F-4D93-AE8C-750588BF00QA/current/Global_POVEQ_LKA.pdf என்னும் இணைப்பின் மூலம் பெறப்பட்டது.

யுனிசெஃப், 2023. இலங்கையின் பல பரிமாண வறுமைக் குறியீடு 2019 முடிவுகள்: தேசிய மற்றும் சிறுவர் பகுப்பாய்வு. https://www.unicef.org/srilanka/reports/sri-lankas-multidimensional-poverty-index-2019-results என்னும் இணைப்பின் மூலம் பெறப்பட்டது.

மேலும் பார்க்கவும் – https://factcheck.lk/factcheck/mp-hashim-spells-out-the-increase-of-poverty-in-sri-lanka/

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன