பேராசிரியர் அனில் ஜயந்த

அரச கடன் தொடர்பில் பேராசிரியர் ஜயந்த விளக்கமளித்துள்ளார்

"

[...] செப்டெம்பர் 27 முதல் அக்டோபர் 15 வரையான காலப்பகுதியில் மத்திய வங்கி ரூ.465.1 பில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்களை வழங்கியுள்ளது […] ரூ.465.1 பில்லியனில் ரூ.400 பில்லியன் கடன் தீர்ப்பனவுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டெய்லி மிரர் | அக்டோபர் 17, 2024

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

டெய்லி மிரர் பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், NPP அரசாங்கத்தினால் பெறப்பட்ட அதிகளவான கடன் தொடர்பில் ஜனாதிபதியின் பொருளாதார விடயங்கள் மற்றும் நிதிக்கான சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் அனில் ஜயந்த கவலை வெளியிட்டுள்ளார். செப்டெம்பர் 27 முதல் அக்டோபர் 15 வரையில் வாங்கப்பட்ட கடன்களில் அநேகமானவை (86%)  ஏற்கனவேயுள்ள கடன் பொறுப்புக்களைத் தீர்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள கடன் புள்ளிவிபரங்களை FactCheck.lk மதிப்பாய்வு செய்தது.

செப்டெம்பர் 27 முதல் அக்டோபர் 15 வரையில் (செப்டெம்பர் 25 ஆம் திகதி ஏல விற்பனையைத் தவிர்த்து) மூன்று திறைசேரி ஏல விற்பனைகள் மூலம் அரசாங்கம் ரூ.357 பில்லியனைக் கடனாகப் பெற்றிருந்தது. அத்துடன் திறைசேரி முறிகள் ஏல விற்பனை மூலம் மேலதிகமாக ரூ.104.5 பில்லியனைப் பெற்றிருந்தது. மொத்தமாக ரூ.461.5 பில்லியன் பெறப்பட்டுள்ளது. இது பேராசிரியர் குறிப்பிடும் 465.1 என்னும் பெறுமதியுடன் ஓரளவு பொருந்துகின்றது. இரண்டு பெறுமதிகளுக்கும் இடையிலான வித்தியாசத்திற்கு இறுதி இரண்டு இலங்கங்களான ஐந்தையும் ஒன்றையும் தவறுதலாக மாற்றிக் குறிப்பிடுவது காரணமாக இருக்கலாம். பேராசிரியர் ஜயந்த திறைசேரி உண்டியல்களை மட்டும் குறிப்பிடுகின்றார். ஆனால் அறிக்கையின் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, அவர் உண்டியல்கள் மற்றும் முறிகள் ஆகிய இரண்டையும் குறிப்பிடுதாக FactCheck.lk விளங்கிக்கொள்கின்றது.

தீர்க்கப்பட்ட கடன்கள் இரண்டு வடிவங்களில் உள்ளன. கடந்த காலங்களில் பெறப்பட்ட கடன்களின் முதிர்வுகளை மீளச்செலுத்துதல் மற்றும் முதிர்ச்சியடையாத கடன்களுக்கு வட்டிகளைச் செலுத்துதல். முதிர்ச்சியடைந்த திறைசேரி உண்டியல்களுக்கு ரூ.390.9 பில்லியன் மீள்கொடுப்பனவு செய்யப்பட்டது. ஏற்கனவேயுள்ள திறைசேரி முறிகளுக்கான கூப்பன் கொடுப்பனவுகள் ரூ.22 பில்லியன் ஆகும். குறித்த காலப்பகுதியில் கடன் தீர்ப்பனவுகள் மொத்தம் ரூ.412.9 பில்லியன் ஆகும். அதாவது, பெறப்பட்ட புதிய கடன்களில் சுமார் 89% கடன் சேவைக் கொடுப்பனவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மொத்தத்தில், மேற்கோள் காட்டப்பட்ட பெறுமதிகளில் சிறு வித்தியாசம் உள்ளது. ஆனால் பேராசிரியரின் ஒட்டுமொத்தக் கூற்று அதாவது, வழங்கப்பட்ட கடன்களில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவை கடன் சேவைக் கொடுப்பனவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது சரியானது.

ஆகவே நாங்கள் அவரது கூற்றைச் சரியானது என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

Debt statistics, Central Bank of Sri Lanka

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன