பாட்டளி சம்பிக ரணவக்க

அரச உத்தியோகத்தர்களின் குறைந்த சம்பளத்திற்கு பெறுமதிசேர் வரிச் சலுகைகளைப் பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க காரணம் காட்டுகின்றார்

"

பெறுமதிசேர் வரி (VAT) சலுகையை வழங்காவிட்டிருந்தால், அரச உத்தியோகத்தர்களின் சம்பளங்களை மாதாந்தம் 30,000 ரூபாவால் அதிகரித்திருக்கலாம். அதுதான் உண்மை

பாட்டளி சம்பிக ரணவக்கவின் ஃபேஸ்புக் | ஜூலை 10, 2024

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

VAT சலுகை காரணமாக இழக்கப்பட்ட வரி வருமானத்தைப் பயன்படுத்தி அரச உத்தியோகத்தர்களின் சம்பளங்களை மாதாந்தம் 30,000 ரூபாவால் அதிகரித்திருக்கலாம் என வரிச் செலவினம் தொடர்பான நிதி அமைச்சின் ஆவணத்தை மேற்கோள் காட்டி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க குறிப்பிடுகிறார்.

இந்தக் கூற்றைச் சரிபார்ப்பதற்கு, நிதி அமைச்சின் வரிச் செலவின அறிக்கை மற்றும் இலங்கை மத்திய வங்கியின் வருடாந்தப் பொருளாதார மீளாய்வு தரவுகளை FactCheck.lk ஆராய்ந்தது.

2022/2023 ஆம் ஆண்டில் VAT சலுகைகள் காரணமாக இழக்கப்பட்ட வரி வருமானம் ரூ.554 பில்லியன் என்பதை நிதி அமைச்சின் ஆவணம் வெளிப்படுத்துகின்றது. 2023 ஆம் ஆண்டில் பொதுத்துறை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 1,353,860 என இலங்கை மத்திய வங்கியின் தரவு சுட்டிக்காட்டுகின்றது.

இந்தப் புள்ளிவிபரங்களின் அடிப்படையில், அரச உத்தியோகத்தர் ஒருவரின் மாதச் சம்பளத்தை முழு ஆண்டிற்கு 34,122 ரூபாவால் அதிகரிக்க முடியும் என்பதுடன், இது பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றுடன் பொருந்துகின்றது.

VAT சலுகைகளால் வருமானம் இழக்கப்படாமல் இருந்திருந்தால் அரச உத்தியோகத்தர்களின் சம்பளங்களை (வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையை அதிகரிக்காமல்) அதிகரிப்பதற்கு சாத்தியம் உள்ளது என்ற பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று அரசாங்கத்தால் அறிக்கையிடப்பட்ட பெறுமதிகளால் ஆதரிக்கப்படுகின்றது.

ஆகவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை சரியானது என வகைப்படுத்துகின்றோம்.

மேலதிகக் குறிப்பு 1: 2023 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சம்பள அதிகரிப்பைத் தொடர்வதற்கான திறன் குறித்து கூற்று எதுவும் குறிப்பிடவில்லை. ஏனெனில் தற்போதைய சம்பள மட்டங்களின் கீழ், தற்போதைய பொருளாதார மீட்சித் திட்டத்தின் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை இலக்குகளைச் சந்திக்கும் வகையில், பெறுமதிசேர் வரிக்கான பல சலுகைகள் 2024 வரவு செலவுத்திட்டத்தில் அகற்றப்பட்டன. எனவே 2024 ஆம் ஆண்டில் வரவு செலவுத்திட்டத்தைப் பாதிக்காமல் சம்பள அதிகரிப்பைத் தொடர்வதற்கு புதிய வருமான வழிகள் தேவைப்பட்டிருக்கும்.



மூலம்

இலங்கை மத்திய வங்கி, வருடாந்தப் பொருளாதார மீளாய்வு 2023, பார்வையிட:

https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-economic-review/annual-economic-review-2023/statistical-appendix

நிதி அமைச்சு, வரிச் செலவின அறிக்கை, பார்வையிட: https://www.treasury.gov.lk/api/file/28292d55-16d1-459a-85ea-1a4222422014

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன