Patali Champika Ranawaka பாட்டளி சம்பிக ரணவக்க

இலங்கை மீளச்செலுத்திய வெளிநாட்டுக் கடன்களை விட அதிக தொகையைக் கடனாகப் பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க குறிப்பிடுகிறார்

"

ஐ.அ.டொ 2 பில்லியன் கடன் மீள்கொடுப்பனவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கையிட்டுள்ள போதும், குறித்த காலப்பகுதியில் பலதரப்பு மூலங்களிலிருந்து ஐ.அ.டொ 3 பில்லியன் கடனாகப் பெறப்பட்டுள்ளது.

பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் X கணக்கு | ஏப்ரல் 8, 2024

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

ஐ.அ.டொ 3 பில்லியன் புதிய கடன்கள் மற்றும் ஐ.அ.டொ 2 பில்லியன் மீள்கொடுப்பனவுகளை மேற்கோள் காட்டி, இலங்கை மீளச்செலுத்தியதை விட அதிக தொகையைக் கடனாகப் பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க X தளத்தில் (முன்னர் ட்விட்டர் எனப்பட்டது) பதிவிட்டுள்ளார். இலங்கை 2022 ஏப்ரலில் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியதன் பின்னரான காலப்பகுதியை அவர் குறிப்பிடுவதாக FactCheck.lk அவரது கூற்றைப் புரிந்துகொள்கிறது. (‘கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதன் பின்னரான’ காலப்பகுதி)

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கியின் இணையத்தளத்தில் உள்ள புள்ளிவிபர அட்டவணைகள், இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை 2022 மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் இணையத்தளம் ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் கடன் மீள்கொடுப்பனவு ஐ.அ.டொ 2 பில்லியன் என்பது, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மற்றும் ஜனாதிபதியின் சமூக விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் உட்பட அரச அதிகாரிகள் குறிப்பிடும் பெறுமதியுடன் பொருந்துகிறது. இந்தப் பெறுமதியானது ஏப்ரல் 2022 முதல் பெப்ரவரி 2024 வரையான மீள்கொடுப்பனவுகளை உள்ளடக்குகிறது. பொதுவெளியில் கிடைக்கும் சமீபத்திய இலங்கை மத்திய வங்கியின் தரவு (ஏப்ரல் 2022 முதல் டிசம்பர் 2023) மீள்கொடுப்பனவுகளை ஐ.அ.டொ 1.38 பில்லியன் எனக் குறிப்பிடுகிறது. ஜனவரி மற்றும் பெப்ரவரி 2024க்குச் செலுத்தப்பட்ட மீள்கொடுப்பனவுகளையும் கணக்கில் கொண்டால் ஐ.அ.டொ 2 பில்லியன் என்பது பொருத்தமானதாக உள்ளது.

ஐ.அ.டொ 2 பில்லியன் கடன் மீள்கொடுப்பனவு செய்யப்பட்டுள்ளது என அரசாங்கம் குறிப்பிடுவதற்குப் பதிலளிக்கும் வகையில், இலங்கை மீள்கொடுப்பனவு செய்த தொகையை விட அதிகமாக பலதரப்புகளிடமிருந்தும் கடனாகப் பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாதிடுவதாக FactCheck.lk புரிந்துகொள்கிறது.

கடன் வாங்கியதில்: கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதன் பின்னரான காலப்பகுதியில் பெறப்பட்ட பலதரப்பு கடன்கள் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் ஐ.அ.டொ 3 பில்லியன் என்பதுடன் பொருந்துகின்றது.

ஏப்ரல் முதல் டிசம்பர் 2022: இந்தக் காலப்பகுதியில் மொத்த பலதரப்பு மற்றும் இருதரப்பு கடன்களின் தொகை ஐ.அ.டொ 1.81 பில்லியன் ஆகும். ஆனால் சுமார் ஐ.அ.டொ 1 பில்லியன் பெறுமதியான இந்தியாவின் கிரெடிட் லைனைத் தவிர பல இருதரப்பு கடன்கள், கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டன. அதாவது இலங்கை சுமார் ஐ.அ.டொ 0.81 பில்லியனை பெரும்பாலும் பலதரப்பு கடன்கள் மூலம் பெற்றுள்ளது.

ஜனவரி முதல் டிசம்பர் 2023: இந்தக் காலப்பகுதியில் பலதரப்பு மூலங்களிலிருந்து ஐ.அ.டொ 2.33 பில்லியன் கடன் பெறப்பட்டுள்ளதை இலங்கை மத்திய வங்கியின் தரவு காட்டுகிறது.

ஆகவே கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதன் பின்னரான காலப்பகுதியில் மொத்த பலதரப்பு கடன்கள் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது போன்று ஐ.அ.டொ 3 பில்லியன் (0.81+2.33) ஆகும்.

ஐ.அ.டொ 2 பில்லியன் மீள்கொடுப்பனவு செய்யப்பட்டுள்ளது என்ற அரசாங்கத்தின் கூற்றுக்கு பாராளுமன்ற உறுப்பினரின் பதிலானது, கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதன் பின்னரான காலப்பகுதியில் இலங்கை பலதரப்புகளிடமிருந்தும் அதைவிட அதிகமாக (ஐ.அ.டொ 3 பில்லியன்) கடன் பெறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுவதாகும். பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று தரவுடன் பொருந்துவதை பகுப்பாய்வு காட்டுகிறது.

ஆகவே பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை நாங்கள் சரியானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

External Sector, Central Bank of Sri Lanka, https://www.cbsl.gov.lk/en/statistics/statistical-tables/external-sector

Annual Report 2022, Central Bank of Sri Lanka, https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports/annual-report-2022

Foreign Financing Disbursements 2023, Department of External Resources, https://www.erd.gov.lk/index.php?option=com_content&view=article&id=94&Itemid=216&lang=en#foreign-financing-disbursements-in-2023

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன