Claim

சாகல ரத்நாயக்க
ஐக்கிய தேசியக் கட்சி
கடந்த வருடம் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை மொத்த வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டின் 25 சதவீதம் ஆகும்.
மவ்பிம: 4 Feb 2019
Statement
கடந்த வருடம் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை மொத்த வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டின் 25 சதவீதம் ஆகும்.
Fact check
சுகாதாரம் மற்றும் கல்விக்கான வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டை அமைச்சர் சாகல ரத்நாயக்க மிகைப்படுத்துகின்றார்.
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க பின்வரும் கூற்றினை தெரிவித்திருந்ததாக மவ்பிம பத்திரிகை 4 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 2019 ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தது.
கடந்த வருடம் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையானது வரவுசெலவுத்திட்ட மொத்த ஒதுக்கீட்டின் 25 வீதம் ஆகும்.
2017 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை குறிப்பிடுவது என்னவென்றால்:
1) 2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.544 பில்லியன்.
2) அரசாங்கத்தின் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூ.2,913 பில்லியன். (அட்டவணை 1 ஐப் பார்க்கவூம் )
எனவே, சுகாதாரம் மற்றும் கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை மொத்த ஒதுக்கீட்டில் 18.69 சதவீதம் ஆகும், மாறாக அமைச்சர் குறிப்பிடுவது போன்று 25 சதவீதம் அல்ல. எனவே, அமைச்சர் ரத்நாயக்கவின் கூற்றினை நாங்கள் “தவறானது” என வகைப்படுத்துகின்றோம்.
*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: 2018 ஆம் ஆண்டுக்கான சுகாதாரம், கல்விக்கான ஒதுக்கீடு மற்றும் மொத்த அரசாங்க செலவீனங்கள்
Sources
அட்டவணை 6.4, மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை 2017, பார்வையிட:
https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports/annual-report-2017