Claim

ராஜித சேனாரத்ன
ஐக்கிய தேசியக் கட்சி
உலக சுகாதார சேவைகளில் சிறந்த சுகாதார சேவைகளை கியூபா மற்றும் இலங்கை வழங்குவதனை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது.
மவ்பிம: 4 Feb 2019
Statement
உலக சுகாதார சேவைகளில் சிறந்த சுகாதார சேவைகளை கியூபா மற்றும் இலங்கை வழங்குவதனை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது.
Fact check
சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த மேலேயுள்ள கூற்றினை மவ்பிம பத்திரிகை 2019 பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.
அந்தக் கூற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு நாங்கள் உலக சுகாதார அமைப்பின் (WHO) உலகளாவிய சுகாதார பாதுகாப்பு: 2017 ஆம் ஆண்டுக்கான கண்காணிப்பு அறிக்கையை ஆராய்ந்தோம். இந்த அறிக்கை உலகளாவிய சுகாதார பாதுகாப்பின் அடிப்படையில் உலகளாவிய நாடுகளை ஒப்பிடும் ஒரு குறியீட்டை வழங்குகிறது. ஒவ்வொரு நாடும் 0 முதல் 100 என்ற புள்ளி அளவீட்டில் மதிப்பிடப்படுகிறது. உயர்ந்த மட்டத்திலான சேவைகளை வழங்கும் நாடுகளுக்கு ≥80 புள்ளிகள் வழங்கப்படுகின்றன. (இதற்கான வரைவிலக்கணங்கள் மற்றும் மேலதிக தகவல்களுக்கு மூலங்களைப் பார்வையிடவும்)
2015 ஆம் ஆண்டில் 194 நாடுகள் மதிப்பிடப்பட்டன. 22 நாடுகள் '≥80' புள்ளிகளைப் பெற்றன. இவற்றில் இலங்கையோ, கியூபாவோ இல்லை. கியூபாவின் புள்ளியானது 78 ஆகும். இலங்கையின் புள்ளி 62. இலங்கை மற்றும் கியூபாவின் சுகாதார சேவைகள் ஒரே மட்டத்தில் இல்லை என்பதை இந்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அத்துடன் இவ்விரு நாடுகளும் உலக சுகாதார அமைப்பில் சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதாக உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்படவில்லை
இந்தக் கூற்று பிரபலமாக தவறானது என்பதுடன், இதற்கான அடிப்படையை கண்டறிய முடியவில்லை. எனவே நாங்கள் அமைச்சரின் கூற்றினை 'தவறானது' என வகைப்படுத்துகின்றோம்.

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
Sources
உலகளாவிய சுகாதார பாதுகாப்பு என்பதன் வரைவிலக்கணத்திற்கு தயவுசெய்து பார்க்கவும்:
உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு, பார்வையிட: https://www.who.int/en/news-room/fact-sheets/detail/universal-health-coverage-(uhc)
உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு, தயவுசெய்து பார்வையிடவும்:
உலகளாவிய சுகாதார பாதுகாப்பு: 2017 ஆம் ஆண்டுக்கான கண்காணிப்பு அறிக்கை, பக்கம் 3, 13, பார்வையிட: https://apps.who.int/iris/bitstream/handle/10665/259817/9789241513555-eng.pdf?sequence=1