Claim

மாவை சேனாதிராஜா
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
வட மாகாணத்தில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் 75 வீதமானவை பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.
தினமின: 16 Aug 2019
Statement
வட மாகாணத்தில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் 75 வீதமானவை பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.
Fact check
இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் விடுவிக்கப்பட்ட சதவீதம் குறித்து சேனாதிராஜா சரியாகத் தெரிவித்துள்ளார். ஆனால் இவை வட மாகாணத்தில் மாத்திரம் விடுவிக்கப்பட்டவை அல்ல.
இந்தக் கூற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு நாங்கள் இரண்டு ஆதாரங்களை ஆராய்ந்தோம். (1) நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான அலுவலகம் (SCRM) மற்றும் (2) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் (UNHRC) இலங்கையினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆறாவது காலப்பகுதிக்கான அறிக்கை.
அட்டவணை 1 பின்வரும் புள்ளிவிபரங்களை காட்டுகின்றன: 2009 ஆம் ஆண்டில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்ட காணிகளின் சதவீதம் (மார்ச் 2019 நிலவரப்படி) 75 சதவீதம் என்பதை இந்த இரண்டு ஆதாரங்களுமே உறுதிப்படுத்துகின்றன. எனினும், பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா வட மாகாணத்தை மாத்திரமே குறிப்பிடுவதாக செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், பொதுவெளியில் கிடைக்கும் தரவானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான மொத்த மதிப்பீடாகும். உண்மையான ஒலிப்பதிவில் (அட்டவணை 2), பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா இதை அரசாங்க புள்ளிவிபரமாக மேற்கோள் காட்டுவதுடன், பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளது போன்று வடமாகாணத்துடன் மாத்திரம் தொடர்புபடுத்தாமல் தனது உரையில் குறிப்பிட்ட வேறு சில இடங்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த ஒரு புள்ளிவிபரம் மாத்திரமே பகிரங்கமாக பொதுவெளியில் கிடைப்பதாலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் போது இந்த சதவீதம் சரியாக இருப்பதனாலும் நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜாவின் கூற்றினை 'சரியானது' என வகைப்படுத்துகின்றோம்.
*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணி
அட்டவணை 2: 2019 ஓகஸ்ட் 15 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜாவின் உரையின் பதிவு
கேட்பதற்கு: http://bit.do/senathirajahspeech
Sources
நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம், ‘விடுவிக்கப்பட்ட காணிகள் 2009-2019’, பார்வையிட: https://www.scrm.gov.lk/infographics?lightbox=dataItem-ju87cpj5 [last accessed: 11 September 2019]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கையினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆறாவது அறிக்கை, பார்வையிட: https://tbinternet.ohchr.org/_layouts/15/treatybodyexternal/Download.aspx?symbolno=CCPR%2fC%2fLKA%2f6&Lang=en [last accessed: 11 September 2019]