Claim

மங்கள சமரவீர
ஐக்கிய தேசியக் கட்சி
கடந்த இரண்டு மாதங்களில், ரூபாயின் மதிப்பு 2.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
டெய்லி நியூஸ்: 13 Mar 2019
Statement
கடந்த இரண்டு மாதங்களில், ரூபாயின் மதிப்பு 2.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
Fact check
இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளமை குறித்து அமைச்சர் மங்கள சமரவீர சரியாகத் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் மங்கள சமரவீர மார்ச் 12 ஆம் திகதி தெரிவித்திருந்த பின்வரும் கூற்றினை, டெய்லி நியூஸ் 2019 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.4
'கடந்த இரண்டு மாதங்களில், ரூபாயின் மதிப்பு 2.5 சதவீதத்தால் உயர்ந்துள்ளது.'
இலங்கையில் ரூபாயின் மதிப்பு அமெரிக்க டொலரின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்பவே மதிப்பிடப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் ஜனவரி முதலாம் திகதி நாணய மாற்று வீதம் (அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய்) ரூ.182.9113 ரூபாவாக காணப்பட்டது. மார்ச் 11 ஆம் திகதி இது ரூ.178.3794 ஆக காணப்பட்டது. எனவே அமெரிக்க டொலர்களுக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2.5 வீதத்தினால் உயர்ந்துள்ளது.
எனினும், நாணய மாற்று வீதங்கள் நிலையற்றவை. எனவே, குறித்த திகதிகளுக்கு மாத்திரம் சரியாக இல்லாமல் ரூபாயின் ஒட்டுமொத்த போக்கில் இந்த அதிகரிப்பு காணப்படுகின்றதா என நாங்கள் சரிபார்த்தோம். ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை நாணய மாற்றுவீதத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அட்டவணை 1 காட்டுகின்றது. ரூபாயின் மதிப்பு நேரியல் பாதையொன்றை பின்பற்றாவிடினும், ரூபாயின் மதிப்பில் அதிகரிப்பு போக்கினை காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த கூற்று வெளியிடப்பட்ட பின்னரும் ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்தே வருகின்றது. ஆண்டின் இந்த திகதி வரையிலான மொத்த அதிகரிப்பு 4.5 வீதமாக உள்ளது.
எனவே, (சுமார்) இரண்டு மாதங்களுக்கான அதிகரிப்பு வீதம் சரியாக இருப்பதனாலும், ரூபாயின் மதிப்பீட்டில் பரந்த போக்கை ரூபாயின் மதிப்பீட்டில் பரந்த போக்கை பிரதிபலிப்பதாலும் நாங்கள் அமைச்சரின் கருத்தினை 'சரியானது' என வகைப்படுத்துகின்றோம்.
*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: அமெரிக்க டொலருக்கான ரூபாயின் நாணய மாற்றுவீதம்
Sources
இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதம், பார்வையிட: