Claim

கோட்டாபய ராஜபக்ஷ
இலங்கை ஜனாதிபதி
“அஞ்சல் திணைக்களம் தற்போது சுமார் ரூ.6 பில்லியன் நட்டத்துடன் இயங்குகின்றது. இது வருடாந்தம் ரூ.8 பில்லியன் வருமானத்தை ஈட்டுகின்றது. மேலதிக கொடுப்பனவுகள், சம்பளங்கள் மற்றும் பிற செலவினங்களினால் திணைக்களத்தின் செலவினம் சுமார் ரூ.14 பில்லியனாக அதிகரித்துள்ளது.”
தினமின / டெய்லி நியூஸ்: 30 Sep 2020
Statement
“அஞ்சல் திணைக்களம் தற்போது சுமார் ரூ.6 பில்லியன் நட்டத்துடன் இயங்குகின்றது. இது வருடாந்தம் ரூ.8 பில்லியன் வருமானத்தை ஈட்டுகின்றது. மேலதிக கொடுப்பனவுகள், சம்பளங்கள் மற்றும் பிற செலவினங்களினால் திணைக்களத்தின் செலவினம் சுமார் ரூ.14 பில்லியனாக அதிகரித்துள்ளது.”
Fact check
ஜனாதிபதி ராஜபக்ஸ: அஞ்சல் திணைக்களத்தின் செலவினம் குறித்து சரியாகத் தெரிவிக்கின்றார்
இந்தக் கூற்றினை ஆராய்வதற்கு, அஞ்சல் திணைக்களத்தின் செயற்திறன் அறிக்கைகளை FactCheck ஆராய்ந்தது.
2019 ஆம் ஆண்டு ரூ.8.40 பில்லியன் வருமானம் என்பதுடன், 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் அஞ்சல் திணைக்களத்தின் சராசரி வருமானம் ரூ.7.42 பில்லியன் என நிதி செயற்திறன் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. சராசரி செலவினம் ரூ.13.18 பில்லியன் என்பதுடன், 2019 ஆம் ஆண்டில் செலவினம் ரூ.14 பில்லியன் என்பதையும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இது வருமானம், செலவினம் மற்றும் ரூ.6 பில்லியன் நட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் கூற்றுடன் பொருந்திப்போகின்றது.
சராசரியாக, பணியாளர்களின் ஊதியம் – ஊதியங்கள், சம்பளங்கள் மற்றும் பிற சலுகைகள் - மொத்த செலவினத்தின் 89 சதவீதமாக இருக்கின்றது. செலவினங்களின் பெரும்பகுதி சம்பளங்கள் மற்றும் மேலதிகக் கொடுப்பனவுகள் தான் என ஜனாதிபதி குறிப்பிடுவதும் சரி என்பதையே இது சுட்டிக்காட்டுகின்றது.
செலவினங்களின் புள்ளிவிபரங்கள் மற்றும் காரணங்களை ஜனாதிபதி சரியாகத் தெரிவித்துள்ளார். எனவே ஜனாதிபதியின் கூற்றினை நாங்கள் “சரியானது” என வகைப்படுத்துகின்றோம்.
Sources
அஞ்சல் திணைக்களம் - வருடாந்த தரக் கணிப்பு அறிக்கை 2019. ப.79, 80 பார்வையிட:
https://parliament.lk/en/business-of-parliament/papers-presented
அஞ்சல் திணைக்களம் - வருடாந்த தரக் கணிப்பு அறிக்கை 2018. ப.55, 56 பார்வையிட:
https://parliament.lk/en/business-of-parliament/papers-presented
அஞ்சல் திணைக்களம் - வருடாந்த தரக் கணிப்பு அறிக்கை 2017. ப.56, 57 பார்வையிட:
https://parliament.lk/en/business-of-parliament/papers-presented