Claim

கோட்டாபய ராஜபக்ஷ
இலங்கை ஜனாதிபதி
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 மற்றும் 8 வீதத்திற்கு இடையில் காணப்பட்டது. ஆனால் 2019 ஆம் ஆண்டில் இது 2 சதவீதத்திற்கும் கீழே வீழ்ச்சியடைந்துள்ளது.
திவயின: 16 Jun 2020
Statement
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 மற்றும் 8 வீதத்திற்கு இடையில் காணப்பட்டது. ஆனால் 2019 ஆம் ஆண்டில் இது 2 சதவீதத்திற்கும் கீழே வீழ்ச்சியடைந்துள்ளது.
Fact check
பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அதிகரித்துக் குறிப்பிடுகின்றார்.
ஜனாதிபதியின் கூற்றினை, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2019 தேசிய வருமானக் கணக்கு மதிப்பீடுகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் 2019 ஆண்டறிக்கையிலுள்ள தரவுகளைப் பயன்படுத்தி யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் அடிப்படையில் FactCheck ஆராய்ந்தது.
2010 முதல் 2014 வரை, உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் சராசரியாக 6.78 வீதமாக பதிவாகியுள்ளது. இது அவர் குறிப்பிடும் 7 - 8 வீதத்தை விட சற்றுக் குறைவாகும். 2010 - 12 ஆகிய மூன்றாண்டு காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அதிகமாக இருந்ததுடன், 2013 – 14 ஆகிய இரு ஆண்டுகளில் 7 சதவீதத்திற்கும் குறைவாக இருந்ததே இதற்கு காரணம்.
சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட தேசிய புள்ளிவிபரங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 2010 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுகின்றன. எனினும், 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர், 2002 ஆம் ஆண்டே அடிப்படை ஆண்டாகக் கணக்கிடப்பட்டது. இந்தக் கணக்கிட்டின் பிரகாரம், 2010 – 2014 சராசரி வளர்ச்சி வீதமானது 7.4 சதவீதமாகும்.
2019 ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 2.3 சதவீதமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது ‘2 வீதத்தை விடக்குறைவு’ என ஜனாதிபதி குறிப்பிட்டதை விட சற்று அதிகமாகும்.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னருடன் ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டில் பொருளாதார வளரச்சி மிகக் குறைவு என்பதை ஜனாதிபதி சரியாகத் தெரிவித்திருக்கின்றார். எனினும், 2019 ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியினை குறைத்து மதிப்பிட்டிருக்கின்றார்.
எனவே, ஜனாதிபதியின் கூற்றினை ‘பகுதியளவில் சரியானது’ என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.
*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.
Sources
இலங்கை மத்திய வங்கி, சிறப்பு புள்ளிவிபரப் பின்னிணைப்பு, 2019 ஆண்டறிக்கை, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2019/ta/16_S_Appendix.pdf [last accessed: 26 June 2020]
தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம், தேசிய வருமானக் கணக்கு மதிப்பீடுகள் 2019, பார்வையிட: http://www.statistics.gov.lk/national_accounts/dcsna_r2/production.php [last accessed: 26 June 2020]