Claim

கோத்தபாய ராஜபக்ஸ
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
90 சதவீதமான காணிகளை நாங்களே விடுவித்துள்ளோம்.
ஊடக சந்திப்பு: 16 Oct 2019
Statement
90 சதவீதமான காணிகளை நாங்களே விடுவித்துள்ளோம்.
Fact check
மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஸ மிகைப்படுத்துகின்றார்.
இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் 90 வீதமானவை யுத்தம் நிறைவடைந்த பின்னர் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் கீழ் விடுவிக்கப்பட்டதாக இலங்கை பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூற்றினை சரிபார்ப்பதற்கு நாங்கள் நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம் வெளியிட்ட தகவல்களை ஆராய்ந்தோம். அத்துடன் அவர் குறிப்பிடும் சதவீதங்களை உறுதிப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் தகவல்களையும் ஆராய்ந்தோம்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் அரச மற்றும் தனியார் காணிகள் அடங்கும். 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததில் இருந்து 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணிகளில் 68 வீதமானவையும், அரச காணிகளில் 24.3 வீதமானவையும் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டதாக நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. (அட்டவணை 1) மொத்தமாக ஆக்கிரமிக்கப்பட்ட 118,253 ஏக்கரில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி 35.2 வீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளன. கோத்தபாய ராஜபக்ஸ தனியார் காணிகளை மாத்திரம் குறிப்பிடுகின்றார் என்றாலும், உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் அவர் குறிப்பிடுவதை விட மிகவும் குறைவாகும்.
இதனைத் தொடர்ந்து, யாழ் குடாநாட்டில் மாத்திரம் விடுவிக்கப்பட்ட தனியார் காணிகள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஸ பின்வருமாறு தெரிவித்துள்ளார். 'குடாநாட்டை எடுத்துக்கொண்டால் 90 சதவீதத்திற்கும் அதிகமான காணிகள் அதன் சொந்தக்காரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.' யாழ் குடாநாட்டுக்கான புள்ளிவிபரங்களை FactCheck இனால் கண்டறிய முடியவில்லை. எனினும், யாழ் மாவட்டத்தில் (73 சதவீதம்) மற்றும் ஒட்டுமொத்தமாக வட மாகாணத்தில் (69 சதவீதம்) காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதை எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது. அவர் குறிப்பிட்ட 90 சதவீதத்தில் இருந்து இது மிகவும் குறைவாகும்.
முன்னைய அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ஸ மிகைப்படுத்திக் குறிப்பிடுகின்றார். எனவே, அவரது கூற்றினை நாங்கள் 'தவறானது' என வகைப்படுத்துகின்றோம்.
அட்டவணை 1: இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் விடுவிக்கப்பட்டவை மே 2009 – ஜனவரி 2015
அட்டவணை 2: இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் விடுவிக்கப்பட்டவை ஜனவரி 2015 – மார்ச் 2019
Sources
நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையம், ‘2009 -2019 விடுவிக்கப்பட்ட காணிகள்', பார்வையிட: https://www.scrm.gov.lk/infographics?lightbox=dataItem-ju87cpj5 [last accessed: 22 October 2019]
ஊடக சந்திப்பினை பார்வையிடுவதற்கு: https://youtu.be/xpBIDDMYFTE?t=2207 (time stamps – 35:54, 37:36)