Claim

அனுர குமார திஸாநாயக்க
மக்கள் விடுதலை முன்னணி
எமது நாட்டில் பொதுப் போக்குவரத்தினை 52 சதவீதமானவர்கள் மாத்திரமே பயன்படுத்துகின்றனர்... 48 சதவீதமானவர்கள் தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர்.
திவயின: 1 Nov 2019
Statement
எமது நாட்டில் பொதுப் போக்குவரத்தினை 52 சதவீதமானவர்கள் மாத்திரமே பயன்படுத்துகின்றனர்... 48 சதவீதமானவர்கள் தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர்.
Fact check
பொதுப் போக்குவரத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க: மேல் மாகாண தரவுகளைப் பயன்படுத்துகின்றார்
இந்தக் கூற்றினை ஆராய்வதற்கு, 2014 ஆம் ஆண்டு வெளியான பாரிய கொழும்பு நகர பிராந்தியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான நகரப் போக்குவரத்து அபிவிருத்தி திட்ட (CoMTrans) அறிக்கையை FactCheck பயன்படுத்தியது. இந்த அறிக்கையினை போக்குவரத்து அமைச்சின் இணையத்தளத்தில் பார்வையிட முடியும். இந்த அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ள கணக்கெடுப்பு தரவுகள் மேல் மாகாணத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
மேல் மாகாணத்தில் ஒவ்வொரு போக்குவரத்து முறைகள் மூலமான பயணங்களின் எண்ணிக்கையினை (தூரத்தை அல்ல) CoMTrans அறிக்கை குறிப்பிடுகின்றது. மோட்டார் வாகன பயணங்களை மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார் என்றால், அவரது கூற்றான பொதுப் போக்குவரத்தை (அதாவது பேரூந்து மற்றும் ரயில்) பயன்படுத்துபவர்கள் 52 சதவீதம் என்பது சரியானது (அட்டவணை 1). எனினும், இந்த சதவீதம் நாட்டின் முழுமைக்கும் பொருந்தும் என பாராளுமன்ற உறுப்பினர் தவறாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் CoMTrans ஆய்வானது மேல் மாகாணத்திற்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, நாட்டின் முழுமைக்கும் போக்குவரத்தின் பங்கினை மதிப்பிடும் எந்தவொரு ஆய்வும் இல்லை.
மேலேயுள்ள தகவல்களின் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை 'பகுதியளவில் உண்மையானது' என வகைப்படுத்துகின்றோம்.
*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.
*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: மேல் மாகாண போக்குவரத்து - 2014
Sources
போக்குவரத்து அமைச்சு, பாரிய கொழும்பு நகர பிராந்தியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான நகரப் போக்குவரத்து அபிவிருத்தி திட்டம் (CoMTrans) ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் உருவாக்கியது, பார்வையிட: http://www.transport.gov.lk/web/images/downloads/F-CoMTrans_Main_S.pdf