Claim

மைத்திரிபால சிறிசேன
ஜனாதிபதி
இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு நாளைக்கு பல மில்லியன் (ரூபா) நட்டத்தை சந்திக்கின்றன.
திவயின: 4 Jun 2019
Statement
இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு நாளைக்கு பல மில்லியன் (ரூபா) நட்டத்தை சந்திக்கின்றன.
Fact check
இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டம் தொடர்பில் ஜனாதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த மேலேயுள்ள கூற்றை, திவயின 2019 ஜுன் 4 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.
நிதி அமைச்சின் 2018 ஆம் ஆண்டுக்கான அறிக்கை மற்றும் மத்திய வங்கியின் 2018 ஆண்டறிக்கை இந்தக் கூற்றினை உறுதிப்படுத்தும் வகையில் பின்வரும் தகவல்களை வழங்குகின்றன:
- 2018 ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபையின் வருமானம் ரூ.238.946 பில்லியன். செலவீனம் (வட்டித்தொகை கொடுப்பனவு ரூ.13.037 பில்லியன் உட்பட) ரூ.269.353 பில்லியனாக காணப்படுகின்றது (நிதி அமைச்சின் ஆண்டறிக்கை). இதன் விளைவாக ரூ.30.407 பில்லியன் தொழிற்பாட்டு நட்டம் பதிவாகியுள்ளது. (இது வருமானத்தின் 12.7 வீதத்திற்கு சமமானது) அத்துடன் வரிக்கு முன்னரான நட்டம் ரூ.28.9 பில்லியனாக காணப்படுகின்றது(மத்திய வங்கியின் ஆண்டறிக்கை). எனவே இலங்கை மின்சார சபையின் வரிக்கு முன்னரான ஒரு நாளைக்கான சராசரி நட்டம், ரூ.79 மில்லியனுக்கும் அதிகமாகும்.
- இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான வருமானம் ரூ.535.236 பில்லியன், செலவீனம் ரூ.639.273 பில்லியன். வரிக்கு முன்னரான நட்டமானது ரூ.104.037 பில்லியன் (இது வருமானத்தின் 19.4 சதவீதத்திற்கு சமமானது). எனவே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒரு நாளைக்கான சராசரி நட்டம் ரூ. 285 மில்லியனுக்கும் அதிகமாகும்.
இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாளொன்றுக்கு பல மில்லியன் ரூபா நட்டத்தை சந்திப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுவது சரியானது என்பதனை 2018 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
எனவே நாங்கள் ஜனாதிபதியின் கூற்றினை 'சரியானது' என வகைப்படுத்துகின்றோம்.
*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
Sources
நிதி அமைச்சின் 2018 ஆண்டறிக்கை, பக்கம் 168, 170, அட்டவணைகள் 7.6, 7.7, பார்வையிட: http://www.treasury.gov.lk/documents/10181/12870/Finance+Ministry+Annual+Report+2018+English+updated.pdf/fa11483d-1999-448c-a825-cd170e207b45
இலங்கை மத்திய வங்கியின் 2018 ஆண்டறிக்கை, பக்கம் 93, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2018/en/7_Chapter_03.pdf