
FactCheck.lk முன்வைக்கும் மதிப்பீடுகளின் உண்மைத்தன்மை குறித்து பிரச்சினை இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில 2020 மே 29 ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் மற்றும் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார். FactCheck.lk தொடர்பில் பகிரங்கமாக விமர்சிப்பதற்கு மாறாக, எங்களது மதிப்பீடுகளின் உண்மைத்தன்மையை சவால் விடுப்பதற்கான தரவுகள் அல்லது உண்மைகளை நேரடியாகவோ அல்லது பொது அறிக்கையாகவோ கம்மன்பில எங்களுக்கு இதுவரை வழங்கவில்லை. FactCheck.lk தொடர்பில் பகிரங்கமாக விமர்ச்சிப்பதை விடுத்து, அவரது அறிக்கைகள் தொடர்பில் FactCheck.lk தவறான மதிப்பீடுகளை மேற்கொண்டிருப்பதாக கருதினால், எங்களது மதிப்பீடுகள் தொடர்பில் தரவுகள் மற்றும் தகவல்களை வழங்குமாறு நாங்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில அவர்களுக்கு மீண்டும் பணிவான கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
எங்களது மதிப்பீடுகள் தவறானது என அவர் கருதினால் FactCheck.lk இல் காணப்படும் ‘பதிலளிப்பதற்கான உரிமை’யைப் பயன்படுத்தி எங்களுக்கு அறியத்தருமாறு நாங்கள் இதற்கு முன்னரும் கேட்டுக்கொண்டிருந்தோம். (http://factcheck.lk/blog/factchecklk-2)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் அறிக்கைகள் தொடர்பில் FactCheck.lk முன்னெடுத்த மதிப்பீடுகளுக்கு தயவுசெய்து பார்க்கவும்:
http://factcheck.lk/claim/udaya-gammanpila-immunity
http://factcheck.lk/claim/udaya-gammanpila-12
http://factcheck.lk/claim/udaya-gammanpila-9
http://factcheck.lk/claim/udaya-gammanpila-5